Homeசினிமாசர்தார் 2: படம் பற்றி வெளியான முக்கிய அப்டேட்..! என்ன தெரியுமா?

சர்தார் 2: படம் பற்றி வெளியான முக்கிய அப்டேட்..! என்ன தெரியுமா?

தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் கார்த்திக். இவர் தனது முதல் படத்திலேயே தமிழ் திரையுலகிற்கு தான் யார் என்பதை காட்டியவர். மேலும் படத்திற்கு படம் இவருடைய மாறுபட்ட கதாபாத்திரம் மற்றும் அதற்கு ஏற்றார்போல இவரின் நடிப்பு என அனைத்தும் இவரது வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது.

இப்போது இவர் தமிழ் சினிமாவின் முக்கிய மற்றும் தவிர்க்க முடியாத நடிகராகவும் உள்ளார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான பொன்னியின் செல்வன் படம் இவரது புகழை அடுத்த இடத்திற்கு எடுத்துச் சென்று விட்டது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் அவர் அனைவரையும் கவர்ந்து விட்டார் என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் தான் இவர் தற்போது தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் இவர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான சர்தார் திரைப்படம் பெரும் வெற்றியை அடைந்தது. மேலும் இப்படம் 100 கோடி வசூலித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகமானது. இப்படத்தின் இரண்டாவது பாகத்தின் எதிர்பார்ப்பிற்கு பலரும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Sardar 2 Update

இந்நிலையில் தான் தற்போது இந்த சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் (Sardar 2) குறித்து இணைய தளத்தில் தகவல் (Sardar 2 New Update) வெளியாகியுள்ளது. இந்த தகவலில் இந்த சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் முதல் பார்ட்டில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: பிரம்மாண்டமாக நடைபெற உள்ள அம்பானி மகன் திருமணம்..!யாரெல்லாம் வராங்க தெரியுமா?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular