தமிழகத்தை பொறுத்தவரையில் கல்விக்காக செய்யப்படும் சலுகைகள் என்பது மிகவும் அதிகம் அதிலும் பெண் கல்விக்காக செய்யப்படும் சலுகைகள் மிக மிக அதிகம். குடும்ப சூழல் மற்றும் வருமை காரணமாக ஒரு பெண் கூட தங்கள் கல்வியை பாதியில் நிறுத்தக்கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமாக உள்ளது. இதற்காக தான் பல்வேறு புதிய திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
இதுப்போன்ற திட்டங்களில் ஒன்றுதான் புதுமை பெண் திட்டம். புதுமைப்பெண் திட்டம் (Pudhumai Penn Scheme) என்பது இதற்கு முன்னர் செயல்பாட்டில் இருந்த பெண்களின் திருமணத்திற்கு அவர்களில் கல்வி தகுதியின் அடிப்படையில் நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்குவது என்ற திட்டத்தினை தற்போது பெண்களில் உயர்கல்வியை ஊக்குவிக்க அதற்காக நிதியுதவி வழங்கவேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டுள்ள ஒரு திட்டமாகும்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அரசு பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பது தான். இந்த திட்டதின் பெயர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்பது ஆகும். ஆனால் இது புதுமைப்பெண் திட்டம் (Puthumai Pen Thittam) என்ற பெயரில் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் (Pudhumai Penn Scheme) படி அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வியின் போது மாதம் ரூ.1,000 உயர் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இந்த திட்டம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இதன் படி இதுவரை அரசு பள்ளி மாணவிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இந்த உதவித்தொகை இனி அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இத்திட்டதின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயன்பெறுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: Atlee Next Movie Update: இந்த காம்போவ யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க..! |