Homeசெய்திகள்கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம்..! உடனே செக் பண்ணுங்க..!

கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம்..! உடனே செக் பண்ணுங்க..!

இன்றைய காலகட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்பது அதிகமாக தான் உள்ளது. விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்புகள் என்பதை அறிந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை தொடர்ந்து செய்து தான் வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் கூட விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்காக பல முக்கிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள திட்டங்களை விரிவுபடுத்துதல் என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இந்த தகவலில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை (Vivasayigalukku Ukka Thogai) வழங்குவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் படி கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலம் ஊக்கத்தொகைகள் (Incentives for farmers) வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Incentives for farmers

கரும்பின் ஆதரவு இதற்கு முன்னர் ரூபாய் 315 ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த அறிவிப்பு மூலம் கரும்பின் ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு 340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 215 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசின் 340 மற்றும் தமிழக அரசின் ஊக்கத்தொகை (Ukka Thogai) 215 ஆகியவை வரவு வைக்கப்படும். இந்த தகவல் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: பூண்டு விலை உயர்வை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்துள்ள அரிசி விலை..! எவ்வளவு தெரியுமா?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular