Homeசெய்திகள்உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள்...

உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள்…

ஆர்மீனியாவின் நடைபெற்ற ஜூனியர் உலக குத்துச்சண்டை போட்டியில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய குத்துச்சண்டை வீரர்கள் மூன்று பேர் தலா ஒரு பதக்கம் வீதம் மூன்று வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.

2001 ஆம் ஆண்டு அஜர்பைஜான் என்ற நாட்டில் பாகு என்ற பகுதியில் இந்த ஜூனியர் குத்துச்சண்டை போட்டி முதல் முதலில் தொடங்கியது. 2007 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த ஜூனியர் குத்துச்சண்டை போட்டியில் 15 அல்லது 16 வயது உடையவர்கள் பங்கேற்கலாம்.

ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி ஆர்மீனியாவின் தலைநகரான யெரெவனில் நடைபெற்றது. நவம்பர் 23 ஆம் தேதி இப்போட்டி தொடங்கியது. இந்நிலையில் நேற்று நடந்த இறுதிப்போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த மூன்று குத்துச்சண்டை வீரர்கள் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.

Silver Medals

நேற்று நடந்த குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் ஆண்களுக்கான 80 கிலோ பிரிவில் இந்திய வீரர் ஹர்திக் பன்வார் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அஷுரோவ் பைராம்கான் இருவரும் மோதினர். இதில் 2-3 என்ற எண்ணிக்கையில் ஹர்திக் பன்வார் தோல்வி அடைந்தார் எனவே வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 54 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை அமித்ஷா கெரட்டா மற்றும் கஜகஸ்தானை சேர்ந்த வீராங்கனையும் மேதினர். இப்போட்டியில் 0-5 என்ற எண்ணிக்கையில் அமிஷா கெரட்டா தோல்வியுற்றார். எனவே இவர் இந்த போட்டியில் வெள்ளி வென்றார். இதேபோன்று 80+ கிலோ பிரிவில் பிராச்சி டோகாஸ் 0-5 என்ற எண்ணிக்கையில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதற்கிடையே பயல் (48 கிலோ), நிஷா (52 கிலோ), வினி (57 கிலோ), ஸ்ருஷ்டி (63 கிலோ), அகன்ஷா (70 கிலோ), மேகா (80 கிலோ), ஜதின் (54 கிலோ), சாஹல் (75 கிலோ), ஹேமந்த் (80 கிலோ) ஆகிய இந்திய வீரர்/வீராங்கனைகள் தங்களது பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular