தமிழக மக்களால் உலக நாயகன் என்று அழைக்கப்படுபவர் தான் கமல்ஹாசன். இவரது படங்கள் அனைத்தும் மாறுபட்ட கதைகளத்துடன் மக்களுக்கு பிடித்தது போல இருக்கும் இதன் காரணமாகவே இவருக்கும் இவரது படங்களுக்கும் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். இந்த வரிசையில் கடந்த 1996-ம் வெளியான படம் தான் இந்தியன்.
இந்த படம் இதுவரை இல்லாத ஒரு புதிய கதைகளத்துடன் மக்களை கவரக்கூடிய வகையில் இருந்தது இதன் காரணமாக இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மிகப்பெரிய வெற்றியின் காரணமாக இத்தனை வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை லைகா நிறுவனமும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இப்படத்தில் உலக நாயகம் கமல்ஹாசனுடன் எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்துள்ளார். இது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இவர்கள் மட்டுமின்றி இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், மறைந்த விவேக், மறைந்த மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பணிகள் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதுவரை படத்தின் சில போஸ்டர்கள் மற்றும் அவ்வப்போது சில வீடியோக்கள் மட்டுமே வெளியிடப்பட்டது. அதை தவிர்த்து படம் குறித்த எந்த தகவலையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது.
இந்த நிலையில் தான் தற்போது இந்த படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி (Indian 2 Movie Release Date) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் மே மாதம் 24-ம் தேதி (Indian 2 Release Date) வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: இஷா அம்பானியின் வீட்டை 500 கோடி கொடுத்து வாங்கிய பிரபல நடிகை..! |