Homeசெய்திகள்பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய ஆப்கள்..! கூகுளுக்கு கண்டனம்..!

பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய ஆப்கள்..! கூகுளுக்கு கண்டனம்..!

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக இருப்பது தான் கூகுள். இது மிகவும் பிரபலமான மற்றும் உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் Browser- ஆகவும் உள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் பல ஆப்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இந்த கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக இந்திய ஆப்களை நீக்கியுள்ளது (Indian Apps Removed from Play Store), இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனமானது சில வாரங்களுக்கு முன்பு சேவை கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட சர்ச்சையை காரணமாக இந்தியாவின் சில் ஆப்களை கூகுள் நீக்கத் தொடங்கியுள்ளது. இதில் சுமார் 10 முக்கியமான இந்திய நிறுவனங்கள் உள்ளது. இந்த 10 நிறுவனங்களும் சேவைக் கட்டணங்களைச் சரியாக செலுத்தவில்லை எனறுக் கூறி தற்போது கூகுள் நீக்கம் (Indian Apps Removed) செய்துள்ளது.

பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட ஆப்கள் (Removed Indian Apps), குக்கூ எஃப்எம், பாரத் மேட்ரிமோனி, ஜாப் ஆப் ஆன நௌக்ரி, பாலாஜி டெலிஃபில்ம்ஸ் ஆல்ட்-ன் ஆல்ட் பாலாஜி, ட்ரூலி மேட்லி மற்றும் இந்திய மேட்ரிமோனி ஆப்களான ஷாதி, மேட்ரிமோனி, கிறிஸ்டியன் மேட்ரிமோனி, முஸ்லிம் மேட்ரிமோனி மற்றும் ஜோடி ஆகியவையும் ப்ளே ஸ்டோரில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளது.

Indian Apps Removed

கூகுள் நிறுவனமாது தற்போது வரை சேவைக்கட்டணமாக 11 முதல் 26 சதவீதம் வரை கட்டணம் வசூலித்து வருகிறது. ஆனால் இதனை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியது மேலும் சில நிறுவனங்கள் கட்டணத்தை செலுத்தவில்லை என்று, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்ந்த முக்கிய நிறுவனங்கள் அன் அகாடமி, ஆஹா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், இன்ஃபோ எட்ஜ், ட்ரூலி மேட்லி, குட்டம், டெஸ்ட்புக் ஆகியவை கூகுள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்: அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம்..! அறிவிப்பு வெளியானது..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular