Homeவேலைவாய்ப்பு செய்திகள்10வது படித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலைப்பாக்க ஓர் அறிய வாய்ப்பு..! விண்ணப்பிக்க தவறிடாதீர்கள்..!

10வது படித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலைப்பாக்க ஓர் அறிய வாய்ப்பு..! விண்ணப்பிக்க தவறிடாதீர்கள்..!

வங்கியில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அதற்காக பலரும் போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து கொண்டிருப்பர். எனினும் அந்த போட்டி தேர்வுகளில் வெற்றிப்பெற்று அணைவராலும் பணிக்கு செல்ல முடிவது இல்லை. இந்நிலையில் தான் தற்போது வெறும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு எந்தவித தேர்வுகளும் இன்றி வங்கியில் வேலை குறித்த ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் படி இந்தியன் வங்கியில் காலியாக உள்ள சில பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் Indian Bank Recruitment 2024 அறிவிப்பில் வெளியாகியுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான Indian Bank Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த Indian Bank ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள Jewel Appraiser காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த Indian Bank Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Bank Recruitment 2024-ன் படி காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான www.indianbank.in-ல் வெளியாகியுள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து அதன் பிறகு அதனை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும் அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்க விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு 10 வருடம் முன் அனுபவம் தேவை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Bank Jewel Appraiser Recruitment காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.04.2024 முதல் 10.04.2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் வங்கியில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு உள்ள காலிப்பணியிடங்கள் (Indian Bank Jewel Appraiser Vacancy) மற்றும் இந்த பணிகளுக்கான சம்பளம் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு குறைந்த பட்சம் 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 50-வயதிற்கு மேல் இருக்ககூடாது. மேலும் இந்த Indian Bank Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

10வது படித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலைப்பாக்க ஓர் அறிய வாய்ப்பு..! விண்ணப்பிக்க தவறிடாதீர்கள்..!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-03

Posting Expiry Date: 2024-04-10

Employment Type : FULL_TIME

Hiring Organization : Indian Bank

Organization URL: www.indianbank.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, East Main Road, Gandhi Nagar, Vellore, Tamil Nadu, 632006, India

Education Required:

  • High School

Experience Required: 120 Months

இதையும் படியுங்கள்: 12வது படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் வேலை மாதம் ரூ.36,200/- சம்பளத்துடன்..! உடனே விண்ணப்பியுங்கள்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular