கோடை காலம் வந்துவிட்டது இந்த கோடைகாலத்தில் பல பொருட்கள் நம் நினைவிற்கு வரலாம். ஆனால் பலருக்கு நினைவில் வருவது இது மாங்காய் சீசன் என்பது தான். மாங்காய் பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்று தான் கூறவேண்டும். அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்த ஒரு பொருள் தான் மாங்காய். இந்த மாங்காயை வைத்து பல விதமான ரெசிபிகள் செய்யலாம். அதில் நம்மில் பலருக்கு பிடித்த மாங்காய் ஊறுகாய் எப்படி (Easy Mango Pickle Recipe in Tamil) செய்வது என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி (How to Make Mango Pickle in Tamil)
தேவையான பொருட்கள் (Mango Pickle Ingredients)
- மாங்காய் – 1 கிலோ
- வெந்தயம் – 3 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – 200 மி.லி
- பெருங்காய தூள் – 3 டீஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் – 6 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
மாங்காய் ஊறுகாய் செய்முறை (Mango Pickle Recipe in Tamil)
- மாங்காய் ஊறுகாய் செய்வதற்கு முதலில் மாங்காய்களை எடுத்து நன்றாக கழுவி தண்ணீர் இல்லாதவாறு நன்றாக துடைத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்போது மாங்காய்களை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அவற்றை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் 3 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- உறுகாய்க்கு கூடுதலாக சுவை சேர்க்க விருப்பினால் நாம் உப்பு சேர்த்து வைத்துள்ள மாங்காயை அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை நன்றாக ஊற வைக்கவும்.
- நாம் நறுக்கி உப்பு சேர்த்து ஊறவைத்த மாங்காய் நன்றாக ஊறிய பிறகு அதில் பெருங்காயத்தை சேர்க்க வேண்டும்.
- இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எடுத்து வைத்துள்ள வெந்தயத்தை சேர்க்கவும். இப்போது தீயை மிதமான வைத்து வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- வெந்தயம் நன்றாக ஆறிய பிறகு அதனை ஒரு மிக்ஸியில் சேர்த்து அதனை நன்றாக அரைத்து கொள்ளவும்.
- இந்த இந்த வெந்தய பொடியையும் நாம் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து ஊறவைத்துள்ள மாங்காய் துண்டுகளோடு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
- பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அது சூடான பிறகு அதில் நல்லெண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அதில் கடுகு சேர்த்துக்கொள்ளவும்.
- கடுகு நன்றாக பொரிந்தவுடன், அடுப்பை அணைத்துவிட வேண்டும். பிறகு அந்த எண்ணெயில் மிளகாய் தூளை சேர்க்கவும்.
- நாம் சேர்த்த மிளகாய் தூள் நிறம் மாறிவிட கூடாது. அதற்கு முன்னால் அந்த மிளகாய் தூள் சேர்த்த எண்ணெயை மாங்காய் துண்டுகளை மீது ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும்.
- இப்போது அருமையான மாங்காய் ஊறுகாய் ரெடி. இதனை நாம் ஒரு பீங்கான் பாத்திரத்தில் வைத்து அதில் காற்று புகாதவாறு இறுக்கமாக மூடி வைக்கவும்.
- இவ்வாறு வைத்து பயன்படுத்தினால் இந்த ஊறுகாயை நாம் மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
இப்போது நாம் இப்பதிவில் சுவையான மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி (Mangai Oorugai Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம்.
சுவையான மாங்காய் ஊறுகாய் இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க..!
நம்மில் பலருக்கு பிடித்த மாங்காய் ஊறுகாய் எப்படி (Easy Mango Pickle Recipe in Tamil) செய்வது என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
Keywords: Mango Pickle, Mango Pickle Recipe
Recipe Yield: 5
Preparation Time: PT10M
Cooking Time: PT10M
Total Time: PT20M
Recipe Ingredients:
- Mango – 1 kg
- Fenugreek – 3 tbsp
- Sesame Oil – 200 ml
- Asparagus powder – 3 tbsp
- Kashmiri Chilli Powder – 6 tbsp
- Salt – required quantity
Recipe Instructions: மாங்காய் ஊறுகாய் செய்வதற்கு முதலில் மாங்காய்களை எடுத்து நன்றாக கழுவி தண்ணீர் இல்லாதவாறு நன்றாக துடைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது மாங்காய்களை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அவற்றை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் 3 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். உறுகாய்க்கு கூடுதலாக சுவை சேர்க்க விருப்பினால் நாம் உப்பு சேர்த்து வைத்துள்ள மாங்காயை அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை நன்றாக ஊற வைக்கவும். நாம் நறுக்கி உப்பு சேர்த்து ஊறவைத்த மாங்காய் நன்றாக ஊறிய பிறகு அதில் பெருங்காயத்தை சேர்க்க வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எடுத்து வைத்துள்ள வெந்தயத்தை சேர்க்கவும். இப்போது தீயை மிதமான வைத்து வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வெந்தயம் நன்றாக ஆறிய பிறகு அதனை ஒரு மிக்ஸியில் சேர்த்து அதனை நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த இந்த வெந்தய பொடியையும் நாம் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து ஊறவைத்துள்ள மாங்காய் துண்டுகளோடு சேர்த்து கலந்துக்கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அது சூடான பிறகு அதில் நல்லெண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அதில் கடுகு சேர்த்துக்கொள்ளவும். கடுகு நன்றாக பொரிந்தவுடன், அடுப்பை அணைத்துவிட வேண்டும். பிறகு அந்த எண்ணெயில் மிளகாய் தூளை சேர்க்கவும். நாம் சேர்த்த மிளகாய் தூள் நிறம் மாறிவிட கூடாது. அதற்கு முன்னால் அந்த மிளகாய் தூள் சேர்த்த எண்ணெயை மாங்காய் துண்டுகளை மீது ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது அருமையான மாங்காய் ஊறுகாய் ரெடி. இதனை நாம் ஒரு பீங்கான் பாத்திரத்தில் வைத்து அதில் காற்று புகாதவாறு இறுக்கமாக மூடி வைக்கவும். இவ்வாறு வைத்து பயன்படுத்தினால் இந்த ஊறுகாயை நாம் மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
4.5
இதையும் படியுங்கள்: Mango Halwa Recipe : கோடைக்கால ஸ்பெஷல் மாம்பழ அல்வா செய்வது எப்படி… |