கோடை காலம் என்றாலே அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு விடும். இதன் காரணமாக அனைவரும் கோடை விடுமுறைக்கு சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். இவ்வாறு கோடை காலத்தில் ரயிலில் பயணிம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வே ஒரு புதிய அறிவிப்பை (Indian Railways New Announcement) அறிவித்துள்ளது.
இந்த கோடை காலத்தில் ரயிலில் அதிகமான பயணிகள் பயணம் செய்வார்கள். அதிலும் குறிப்பாக முன்பதிவு செய்யாத பெட்டிகளில் அதிக பயணிகள் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு மலிவு விலையில் உணவு (Low Price Meals on Railway) விற்பனை செய்யும் திட்டம் ஆனது இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி 200 கிராம் எடைக் கொண்ட தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை மற்றும் கிச்சடி போன்ற உணவுகளில் ஏதேனும் ஒன்று எகானமி மீல்ஸ் என்ற பெயரில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
325 கிராம் எடைக் கொண்ட பூரி மசாலா மற்றும் பஜ்ஜி ஆனது ஜனதா கானா என்ற பெயரில் 20 ருபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல் 350 கிராம் எடையுள்ள மசால் தோசை உட்பட தென்னிந்திய உணவு வகைகள் ஆனது ஸ்னாக் மீல்ஸ் என்ற பெயரில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
உணவுகள் மட்டுமின்றி 200 மி.லி. தண்ணீர் பாட்டில் ஆனது 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் (Railways Offer Meals for Low Price) அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் இந்த உணவுகளை வாங்கும் வகையில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகளுக்கு அருகில் நடைமேடைகளில் இந்த உணவுகளுக்கான கவுன்ட்டர்கள் அமைக்கப்பட உள்ளன எனவும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.