குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயணம் மேற்கொள்வது என்றால் பிடித்த செயல் ஆகும். அதுவும் ரயில் பயண்ம் என்றால் சொல்லவா வேண்டும். எந்த வித தொந்தரவும் இன்றி சோகுசாக பயணம் மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் ரயில் பயணம் உதவியாக இருக்கும்.
பயணிகளின் வசதிக்காக ரயில்வே பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய (Indian Railway Super App) அறிவிப்பை வெளியிட்டள்ளது. இந்த அறிவிப்பின் படி ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட்டை ரத்து செய்தால் அவர்களின் பணம் 24 மணி நேரத்தில் அவர்களுக்கு ரீஃபண்டு செய்வதற்கு புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு இந்திய ரயில்வே சூப்பர் ஆப் என்ற ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியில் ரயில்வே துறை தொடர்பான அனைத்து தகவல்களும் பயனர்களுக்கு தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அதேபோல் இது ரயில்வேவின் பணிகளை எளிதாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக இந்த திட்டத்தை 100 நாட்களுக்கு செயல்படுத்த இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் ரயில் பயணிகள் பலவகையான பயன் பெரும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் பணியாக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால் பயணிகளின் பணம் 24 மணி நேரத்தில் திரும்பி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக ரத்து செய்யப்பட்ட டிக்கெட் பணம் கிடைக்க 3 நாட்கள் ஆகும். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக ரயில்வே துறை இந்த (Indian Railway Puthiya App) நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த சூப்பர் ஆப் (Super App) மூலம் ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு, ரயில்வே செயல்பாடுகள் மற்றும் ரயில் கண்காணிப்பு போன்ற பல வசதிகளை பெற முடியும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு… சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! |