இந்தியாவில் முதல்முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை நாட்டின் பிரதமர் மோடி தொடங்கிவைத்துள்ளார். இந்த திட்டத்தில் மூலம் ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு வரை உள்ள 16.6 கி.மீ. தூரத்திற்கு நீருக்கடியில் மெட்ரோ ரயில் (Underwater Metro train) சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை மூலம் தாஜ்மகால் உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் மெட்ரோ ரயிலில் சென்றுவரவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொல்கத்தாவின் ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேட் வரையான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ரயில் தடமானது ஹூக்ளி நதியில் 32மீ ஆழத்திலும் 520மீ நீளத்திற்கும் இந்த சுரங்க பாதை நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தடமானது ஹூக்ளி ஆற்றுத் தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16மீ ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நீருக்கு அடியில் சுமார் 520மீ நீளத்தை 45 நொடிகளில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை (Underwater Metro train Service) மூலம் தினசரி 7 லட்சம் பயணிகள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து இந்த சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்ததோடு மட்டுமல்லாமல் அந்த ரயிலில் மாணவர்களுடன் பயணித்து கலந்துரையாடினார்.
மேலும் சுற்றுலாத் தலங்கள் இடையில் உள்ள இணைப்பை மேம்படுத்த ஆக்ரா மெட்ரோ சேவையையும் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இதுமட்டுமின்றி இன்னும் சில ரயில் சேவைகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும் இதன் மூலமாக மொத்தம் ரூ.15,400 கோடி மதிப்பிலான போக்குவரத்து இணைப்புத் திட்டங்களை கொல்கத்தாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதையும் படியுங்கள்: Maha Shivratri Special Buses: மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..! |