தொழில்நுட்பம்

Infinix Smart 8 Series: வெறும் ரூ. 7,099-ல் ஐபோன் அம்சத்துடன் அறிமுகம்..!

பல ஆண்ராய்டு பாேன்கள் இருந்தாலும் பலரின் கணவாக இருப்பது என்றால் அது ஐபோன் தான். இந்த போன் விலை அதிகம் என்றாலும் இதில் உள்ள பீச்சர்கள் (features) அனைத்தும் மக்களுக்கு அதிக அளவில் பிடிக்கிறது. ஆனால் அனைவராலும் இந்த மாடல் போன்களை வாங்க முடிவதில்லை. இதற்கு முக்கிய காரணம் என்றால் அதன் விலை தான். இது போன்ற விலை அதிகமாக உள்ள போன்கள் மீது ஆர்வம் அதிகமாக இருந்தாலும், விலை குறைந்த போன்கள் தான் சந்தையில் அதிக அளவில் விற்பனை ஆகிறது என்பது தான் உண்மை.

இந்நிலையில் தான் இந்திய மார்க்கெட்டில் மலிவு விலையில் அறிமுகமாகும் போன்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இன்பினிக்ஸ் நிறுவனம் சரியாக பயன்படுத்தி வருகிறது. குறைந்த விலையில் தனது புதிய போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் மற்றொரு புதிய மாடல் போனை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வெறும் 6,999 ரூபாயில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் (Infinix Smart 8 Series) மாடல் போன்கள் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. தற்போது இப்பதிவில் இந்த போன் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ்

  • ஐபோன்களில் புது Features என்று அறிமுகம் செய்யும் சில அம்சங்கள் சில ஆண்ட்ராய்டு மொபைல்களில் வெளியான பழைய அம்சங்களாக தான் இருக்கும். எனினும் இது போன்ற ஐபோன்கள் அதிக பிரபலமாக இருக்க காரணம் ஐபோன் வெளியிடும் பல அம்சங்களை ஆண்ட்ராய்டு போன்களில் உடனே கொண்டு வந்து விடுவது தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதில் பல அம்சங்களை பட்டியலிட்டு கூறலாம். இந்நிலையில் சமீப காலத்தில் பிரபலமாக இருந்த ஐபோன் பீச்சரான டைனமிக் ஐலேண்ட் தற்போது இந்த மாடல் போனில் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் போன்கள் வெறும் 6,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. மேலும் இந்த போனில் டைனமிக் ஐலாண்ட் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வளவு குறைந்த விலையில் ஐபோன் பீச்சர் உடன் போன் கிடைப்பது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்குள் இந்த போனின் மற்ற அம்சங்கள் குறித்த தகவல்களும் வெளியாகயுள்ளது. இந்த மொபைல் 50MP கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் ஸ்டோரேஜ்-காக 8 GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் டிஸ்ப்ளே (Infinix Smart 8 Series Display)

இந்த புதிய மாடல் மொபைலில் 90Hz Refresh Rate கொண்ட 6.6 இன்ச் HD Plus டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் கேமரா (Infinix Smart 8 Series Camera)

  • இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் போனில் 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமராவானது ஒரு Dual AI Camera சிஸ்டமாகும்.
  • அதுமட்டுமின்றி இந்த கேமராவில் நேச்சுரல் போர்ட்ராய்டு (Natural Portrait) மற்றும் எச்டிஆர் (HDR) போன்ற மோட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 8 எம்பி செல்பீ கேமரா (Selfie Camera) கொடுக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் சார்ஜிங் (Infinix Smart 8 Series Charging)

இந்த புதிய மாடல் போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் ரேம் (Infinix Smart 8 Series RAM)

இந்த மாடல் மொபைலில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனோடு சேர்த்து 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் லாக் சிஸ்டம் (Infinix Smart 8 Series Lock System)

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் லாக் சிஸ்டம் பற்றி பார்க்கலாம். இந்த போனில் சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பேஸ் அன்லாக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போன் மொத்தம் 4 கலர்களில் கிடைக்கிறது. மேலும் இதன் விலை ரூ. 7,099 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே 6.6 இன்ச் HD Plus
கேமரா13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா
செல்பீ கேமரா 8 எம்பி செல்பீ கேமரா
பேட்டரி 5000mAh
விலைரூ. 7,099

இப்பதிவில் நாம் புதிதாக அறிமுகமாகியுள்ள Infinix Smart 8 Series பற்றிய தகவலை இப்பதிவில் பார்த்துள்ளோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இதையும் படியுங்கள்: OnePlus 12 Series: விலை இவ்ளோதானா..! அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் அறிமுகம்..!

Infinix Smart 8 Series – FAQ

1. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் போனின் விலை என்ன?

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் போனின் விலை ரூ. 7,099 ஆகும்.

2. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் போனின் டிஸ்ப்ளே எவ்வாறு உள்ளது?

6.6 இன்ச் HD Plus

Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago