இந்திய அளவில் பிரபலமான விளையாட்டுகளில் கிரிக்கெட்டிற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது விளையாட்டு தான் கபடி. இந்த கபடி போட்டிகள் வருடாவருடம் Pro Kabaddi என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் அணிகள் விளையாடும். இதுவரை மொத்தமாக 12 அணிகள் விளையாடி வருகிறது.
இந்நிலையில் தான் இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக் (Pro Kabaddi 2024) கடந்த நவம்பர் 2-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 12 அணிகள் களமிறங்கி உள்ளது. இந்நிலையில் தற்போது இத்தொடரின் இறுதி லீக் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. மேலும் இது புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வருடத்திற்கான இறுதி லீக் சுற்றுகள் அனைத்தும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது வரை நடந்து முடிந்த போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 87 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 86 புள்ளிகளுடன் புனேரி பல்டன் அணி உள்ளது.
இந்த இறுதிக்கட்ட லீக் சுற்றுகள் முடியும் போது புள்ளிப் பட்டியலில் அதிக புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதன் பிறகு உள்ள நான்கு அணிகள் வரும் பிப்ரவரி 26-ம் தேதி பிளே ஆப் சுற்றில் போட்டியிடும்.
இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி பிளே ஆப் (Tamil Thalaivas Team in Playoff) செல்ல வாய்ப்பு உள்ளதா என பல ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். அது குறித்து இப்பதிவில் பார்க்கலாம். புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் தபாங் டெல்லி அணி உள்ளது. அதனை தொடர்ந்து குஜராத் ஜெயண்ட்ஸ் 4-வது இடத்திலும், ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் 5 மற்றும் 6-வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில் உள்ளது. ஆனால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிபட்டியலில் (Tamil Thalaivas in Points Table) 8-வது இடத்தை பிடித்துள்ளது எனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது.
இதையும் படியுங்கள்: Pro Kabaddi 2024: டாப் 10 ரைடர்ஸ் யார் தெரியுமா? |