பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருபவர் ஷங்கர் தான். இவர் பல வெற்றி படங்கை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பாய்ஸ். இந்த படம் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்தது என்றே கூறலாம். இந்த படத்தில் முதலில் 5 ஹுரோக்களில் ஒருவராக நடிக்க இருந்த இசையமைப்பாளர் பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் திரைப்படத்தில் (Boys Movie actors details in tamil) சித்தார்த், பரத், தமன், மணிகண்டன், பரத் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இநள்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்தது. இயக்குனர் ஷங்கர் முதலில் ரோபோ என்ற படத்தினை இயக்க இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதற்குள் அவர் புதுமுக நடிகர்களை வைத்து பாய்ஸ் திரைப்படத்தை எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
இந்த படத்தில் நடிக்க ஐந்து நடிகர்களையும் புதுமுகங்களாக இருக்க வேண்டும் என அவர் முடிவெடுத்தார். அப்போது அவர் நடிகர்களை தேர்வு செய்யும் வேலையில் இறங்கினார். புதுமுக நடிகர்கர்கள் என்றவுடன் அவருக்கு முதலில் நினைவுக்கு வந்தது இசையமைப்பாளரான நடிகர் ஜிவி பிரகாஷ் தான். இயக்குனர் ஷங்கர் இதற்கு முன் ஜென்டில் மேன் என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார். அந்த படத்தில் சிக்குபுக்கு ரயில் பாடலில் தோன்றி இருந்தால் ஜிவி பிராகாஷ்.
எனவே தான் ஜிவியை தன்னுடைய படத்தில் ஐந்து ஹுரோக்களில் ஒருவராக நடிக்க வைக்க வேண்டும் என அவர் நினைத்திருந்தார். அது மட்டுமல்லாமல் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டு பையன் என்பதாலும் படத்திற்கு நல்ல புரோமோஷன் கிடைக்கும் என்பதால் அவர் அந்த ஐடியாவில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்போது ஜிவி பிரகாஷ் பள்ளியில் படித்து கொண்டிருந்தால் பாய்ஸ் திரைப்படத்தில் (boys padam) நடிக்காமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, பல வருடங்களுக்கு பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வெயில். இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிராகாஷை அறிமுகம் செய்து வைத்தார் ஷங்கர். இப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டான நிலையில், தேசிய விருதும் பெற்றுக்கொடுத்தது.
மேலும் படிக்க: ஆசை ஆசையாய் பட நடிகையை ஞாபகம் இருக்கா? |