தமிழ் சினிமாவின் பிரபல முன்னனி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய். இவர் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான லியோ படம் கூட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தனது அடுத்தப்படத்தில் இவர் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த GOAT படம் தளபதி விஜய்யின் 68-வது படம் ஆகும்.
இந்த நிலையில் தான் தற்போது தளபதி 69 படம் பற்றிய முக்கிய தகவல் (Acter Vijay Next Movie Director) ஒன்று வெளியாகியுள்ளது. இதன் படி நடிகர் விஜய்யின் அடுத்தபடத்தை இயக்கும் இயக்குனர் (Thalapathy 69 Movie Director) குறித்த தகவல் தான் வெளியாகியுள்ளது. தளபதி 69 படத்தினை DVV என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தினை இயக்குனர் அட்லி அல்லது எச் வினோத் ஆகியோரில் ஒருவர் தான் இயக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் ரசிகர்கள் பலரும் தளபதி 69 (Thalapathy 69) படத்தினை எச் வினோத் தான் இயக்க உள்ளார் என்றும் கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு விஜய் ரூபாய். 250 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: இந்திய உளவுத்துறையில் பணிபுரிய வேண்டுமா..! உங்களுக்காக 660 காலிப்பணியிடங்களை வெளியிட்டுள்ளது..! மிஸ் பண்ணிடாதீங்க |