Homeவிளையாட்டுT20 World Cup: ஐபிஎல் எதிரொலி... பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணியில் இல்லை..! களமிறங்கும்...

T20 World Cup: ஐபிஎல் எதிரொலி… பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணியில் இல்லை..! களமிறங்கும் புதுமுகங்கள்..!

T20 World Cup வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இது 9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் தொடங்கி 29-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்த அணியில் விளையாடவுள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பு விரையில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்த தொடரில் களமிறங்க உள்ள இந்திய அணியில் நடப்பு ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இவர்கள் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் ஒருபுறம் இருக்க 38 வயதிலும் பெங்களூரு அணிக்காக இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வரும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்கும் அணியில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. எனினும் காயத்திலிருந்து மீண்டு விக்கெட் கீப்பராக டெல்லி அணிக்கான சிறப்பாக விளையாடி வரும் ரிசப் பண்ட் உலகக்கோப்பையில் விளையாட அதிகப்படியான உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு டி20 உலகக்கோப்பைக்கான தன்னுடைய 15 பேர் கொண்ட இந்திய அணியை (T20 World Cup India Team) அறிவித்துள்ளார். இவர் அறிவித்துள்ள இந்த அணியில் பல ஆச்சர்யமூட்டும் முடிவுகள் உள்ளது. அதிலும் குறிப்பாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அவர் அறிவித்துள்ள அணியில் ரிஷப் பண்ட் இல்லை. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பராக ஆபாரமாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக்கை தேர்ந்தெடுத்துள்ளார்.

இதுமட்டுமின்றி இந்த அணியில் (T20 World Cup India Squad) ஹர்திக் பாண்ட்யாவும் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக நடப்பு ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் ரியான் பராக்கை தேர்வு செய்துள்ளார். மேலும் இந்த அணியில் இளம் வீரர் ஷிவம் துபேவிற்கு வாய்ப்பு அளித்துள்ளார். அதுமட்டுமின்றி லக்னோ அணியில் அறிமுகமான புது முக வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவை அணியில் தேர்ந்தெடுத்துள்ளார். இது பலரும் எதிர்பார்க்காத ஒன்றாகவே அமைகிறது.

T20 World Cup 2024 India Squad

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி அணியில் (T20 World Cup 2024 India Playing 11) ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரியான் பராக், ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்: மோசமான சாதனை படைத்த CSK அணியின் கேப்டன் ருதுராஜ்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular