அனைவர் வாழ்விலும் ஒரு முறையாவது இந்த கேள்வியை தங்களுக்குள்ளேயே கேட்டிருப்போம். சாலையின் முடிவு எங்கு தான் இருக்கும்? எங்கு போய் முடிவும்? இந்த கேள்விகளுக்கான பதிலை தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
உலகில் உள்ள அனைவரும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல் சாலைகளை தான் பெரிதுதம் பயன்படுத்துகிறார்கள். போக்குவரத்துக்கு அடித்தளமாக இருக்கும் இந்த சாலைகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் கடைசி சாலை எங்கு உள்ளது (Last Road in the World) என கூறியுள்ளனர்.
ஐரோப்பாவில் உள்ள E-69 நெடுஞ்சாலை. இந்த சாலை நார்வேயில் அமைந்துள்ளது. இதுவே உலகின் கடைசி சாலை என புவியியலாளர்கள் அறிவித்துள்ளனர். நார்வேயில் உள்ள இந்த சாலை பூமத்திய ரேகைக்கு மேலே அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த சாலை உலகின் கடைசி சாலை (World Last Road) என கூறப்பட்டுள்ளது.
இது வடக்கு ஐரோப்பாவில் உள்ள நோர்டக்கப்ப (Nordkapp) என்ற இடத்தில் இருந்து நார்வேயில் இருக்கும் Oldafevoord என்ற கிராமம் வரை செல்கிறது. இவ்விடங்களை இணைக்கும் இந்த சாலை சுமார் 129 கிலோ மீட்டர் தூரத்தை கொண்டுள்ளது.
இந்த சாலை கிட்டத்தட்ட வட துருவத்திற்கு அருகில் அழைத்துச் செல்கிறது என்பதால் தான் இந்த சாலையை பூமியின் கடைசி சாலை என அறிவித்துள்ளனர் புவியியலாளர்கள்.
இந்த சாலை 1934 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டது என்றும் 1992 ஆம் ஆண்டு தான் நிறைவு பெற்றது என்றும் கூறப்படுகிறது. அதன் பிறகே இந்த சாலை பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட் வருகிறது.
இந்த சாலை அமைந்துள்ள பகுதியில் காற்று பலமான வேகத்தில் வீசுவதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கோடை காலங்களில் இங்கு அதிக பனி பொழியும் எனவும் வானிலை முன்னறிவிப்புகள் எதுவும் இந்த பகுதியில் வேலை செய்வது இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். எனவே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இங்கு இயற்கை சீற்றங்கள் ஏற்படும் என்பதால் அபாயம் நிறைந்த சாலை இது ஆகும்.