Homeசெய்திகள்இலவச மடிக்கணினி திட்டம்..!அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்..!

இலவச மடிக்கணினி திட்டம்..!அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்..!

கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி அமைத்தது. அப்போது அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய திட்டங்களை வெளியிட்டு இருந்தது. அந்த திட்டங்களில் முக்கியமான மற்றும் சிறப்பான திட்டமாக பார்க்கப்பட்டது தான் இந்த இலவச மடிக்கணினி திட்டம். இத்திட்டமானது (Free laptop Scheme) ஏழை எளிய மாணவர்கள் தங்களது கனவை அடைய வேண்டும் என்பதற்காக தான் உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் படி கடந்த 2012-ம் ஆண்டு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி ( (Free laptop For School Students) வழங்கப்பட்டது. இது மாணவர்களுக்கு மிகவும் உதவியாக அமைந்தது. மேலும் அதிமுக அரசு தொடர்ந்து, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது எனவே இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டது.

அதுமட்டுமின்றி அதிமுக அரசு கொண்டு வந்த இலவச சைக்கிள் திட்டம் பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தான் கடந்த 2021-ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக் கைபற்றியது. அப்போது கொரோனா பெருந்தொற்று மற்றும் அரசின் நிதிநிலை காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அண்மையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்டங்கள் நிறுத்திவிட்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

Free laptop Scheme

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு தாலிக்கு தங்கம், புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நிறுத்தப்பட்டதாக கூறப்படும் இந்த மடிக்கணினி வழங்கும் திட்டம் (Free laptop plan) குறித்து, முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இவரின் இந்த பதில் மக்களிடையே மீண்டும் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம்..! உடனே செக் பண்ணுங்க..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular