Homeதொழில்நுட்பம்இன்ஸ்டா மற்றும் பேஸ்புக்கை தொடர்ந்து LinkedIn-ல் அறிமுகமாகும் புதிய ஃபீச்சர்..!

இன்ஸ்டா மற்றும் பேஸ்புக்கை தொடர்ந்து LinkedIn-ல் அறிமுகமாகும் புதிய ஃபீச்சர்..!

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு சமூக வலைதளங்கள் மீது உள்ள ஆர்வம் என்பது மிகவும் அதிகமாக தான் உள்ளது. இதன் காரணமாக தான் பல புதிய சமூக வலைதளஙகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய தளங்கள் மக்கள் மனதில் பிடித்துள்ள இடத்தை எந்த சமூக வலைதளத்தாலும் பிடிக்கமுடியவில்லை என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை பெற உதவும் தளங்களில் ஒன்றுதான் LinkedIn. இந்த வலைத்தளமானது உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான தளம் ஆகும். இந்த தளத்திற்கு உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பயனர்கள் உள்ளனர்.

எனவே பயனர்கள் விருப்பங்கள் மற்றும் அவர்களில் வசதிக்காக பல புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தான் சமீபத்தில் கூட சுவாரஸ்யமான ஒரு அம்சத்தை வெளியிட்டுள்ளது. இதன் படி வேலைவாய்ப்புகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த LinkedIn சமூக வலைத்தளம் கேமிங் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு உள்ளது.

இந்த புதிய அம்சத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது மற்றொரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் படி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போல லிங்க்ட்இன்னில் ஷார்ட் வீடியோ மற்றும் ரீல்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்களுக்கு ஷார்ட் வீடியோக்கள் மீது மக்களுக்கு உள்ள பிரியம் அதிகமாக உள்ளது.

இந்த புதிய அம்சமானது பயனர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களை ஈர்ப்பதற்காகவும் தான் LinkedIn சமூக வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதற்கான சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே LinkedIn வலைதளத்தில் இந்த அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

இதையும் படியுங்கள்: வருங்கால அரசு அதிகாரிகளுக்கு நற்செய்தி..! TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது..! மிஸ் பண்ணிடாதீங்க..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular