தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில் தான் இயக்குநர் சுந்தர்.சி தற்போது கூறியுள்ள கருத்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர் கூறியதாவது, நான் தெலுங்கு சினிமாவை பழிவாங்கதான் வின்னர் திரைப்படத்தை (Winner Movie Tamil) எடுத்ததாக கூறினார்.
கடந்த 2003-ஆம் ஆண்டு நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வின்னர். இந்த திரைப்படத்தில் கிரண், வடிவேலு, நம்பியார், ரியாஷ் கான், எம்.என் ராஜம் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. மாபெரும் வெற்றி பெற்றது வின்னர் திரைப்படம்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுந்தர்.சி நான் வின்னர் திரைப்படம் எடுப்பதற்கு முன்பு தயாரிப்பாளர் என்னிடம் கேசட் கொடுத்து இதில் நிறைய தெலுங்கு படம் இருக்கிறது. இதனை பார்த்துவிட்டு ஏதாவது படம் பிடித்திருந்தால் சொல்லுங்க நாம் ரீமேக் செய்யலாம் என்று கூறினார்.
நான் அவர் கொடுத்த கேசட்களில் உள்ள படத்தை பார்த்தேன். அதனை பார்த்துவிட்டு எனக்கு கோபம் தான் வந்தது. ஏனென்றால் என்னுடைய படத்தை அப்படியே காப்பி அடித்து படம் எடுத்திருக்கிறார்கள். எனக்கு அந்த படத்தை எடுத்த இயக்குநர் மீது கோபம் வரவில்லை. எனக்கு தெலுங்கு சினிமா மீது மொத்தமாகவே கோபம் வந்தது. அதனால் தான் நான் அவர்களின் நான்கு படங்களை காப்பி அடித்து வின்னர் திரைப்படம் எடுத்தேன் என்று கூறினார்.
இந்நிலையில் நான் காப்பி அடித்த திரைப்படத்திலும் தோற்றுவிட்டேன். காரணம் நான் தெலுங்கு சினிமாவை காப்பி அடித்து வின்னர் திரைப்படம் எடுத்தேன். அந்த படத்தை பார்த்து மீண்டு அதே போன்ற ஒரு படத்தை காப்பி அடித்து எடுத்து வைத்திருக்கிறார்கள். எனவே நான் அதிலும் தோற்றுவிட்டேன் என்று இயக்குநர் (Winner Movie Director) சுந்தர்.சி கலகலப்பாக பேசினார்.