நம்மில் பலருக்கும் நல்ல ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் புதிய அம்சங்களுடன் மொபைல் வாங்க வேண்டும் என்றால் அதன் விலையும் அதிகமாக தான் இருக்கும். இதன் காரணமாக பலரும் புதிய போன்களை வாங்குவது இல்லை. ஆனால் நாம் அனைவரும் எதிர்ப்பார்ப்பது குறைந்த விலையில் நல்ல மற்றும் புதிய அம்சங்கள் கொண்ட ஒரு போன் தான். ஆனால் அது அவ்வளவு எளிது அல்ல.
இதுபோல குறைந்த விலையில் மொபைல் (Low Budget Smartphone) வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக தான் மோட்டோ நிறுவனம் ஒரு புதிய போனை (New Smartphone) தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அது தான் இந்த Moto G04 மெபைல். இப்போது இப்பதிவில் இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
மோட்டோ g04 சிறப்பு அம்சங்கள்
- இந்த மோட்டோ g04 போன் ஆனது பவர் 6.56-இன்ச் HD+ 90Hz LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 12 × 720 பிக்சல்கள் பிக்சல் உடன் வருகிறது
- இந்த போனில் fingerprint lock கைரேகை ஸ்கேனர் வலது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் இரண்டு சிம்கள் போட்டு பயன்படுத்தலாம்.
- இந்த போன் கான்கார்ட் பிளாக், சாடின் புளூ மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.
- இந்த மொபைல் அபெர்ச்சர் கொண்ட 16MP பின்பக்க கேமரா மற்றும் LED ப்ளாஷ் அதைப்போல, 5MP முன் கேமராவை கொண்டு இருக்கிறது.
- 5000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது கண்டிப்பாக ஜார்ஜ் நன்றாக நிற்கும்
இந்த மோட்டோ ஜி04 மொபைலின் விலை ரூ. 6,999 முதல் தொடங்குகிறது. மேலும் 4 ஜிபி + 64 ஜிபி கொண்ட போன் ரூபாய் 6,999-க்கும் 5 ஜிபி + 128 ஜிபி கொண்ட போன் ரூபாய் 7,999-க்கும் கிடைக்கிறது.
இந்த போன் Flipkart, motorola.in ஆகிய தளங்களில் கிடைக்கிறது. இன்று (பிப்ரவரி 22) முதல் மதியம் 12 மணி முதல் எல்லா கடைகளிலும் கிடைக்கும்.
இதையும் படியுங்கள்: Infinix Smart 8 Series: வெறும் ரூ. 7,099-ல் ஐபோன் அம்சத்துடன் அறிமுகம்..! |