Homeதொழில்நுட்பம்Redmi Buds 5: குறைந்த விலையில் அறிமுகம்..! வெறும் 5 நிமிடம் சார்ஜ் பண்ணா போதும்..!

Redmi Buds 5: குறைந்த விலையில் அறிமுகம்..! வெறும் 5 நிமிடம் சார்ஜ் பண்ணா போதும்..!

நம்மில் பலரும் பல காரணங்களுக்காக தினந்தோறும் இசை கேட்பதை வழக்கமாக வைத்து இருப்போம். சிலர் Mind Relaxation-காக பாடல்கள் கேட்போம். சிலர் பொழுதுபோக்கிற்காக பாடல்கள் கேட்போம். மற்றும் சிலர் வேலை பளு தெரியாமல் இருக்கவும் மன அமைதிக்காகவும் பாடல்கள் கேட்போம்.இது போல பாடல்கள் கேட்கும் போது நாம் பயன்படுத்தும் முக்கியமான கருவி தான் இந்த Earbuds.

இந்த நவீன காலத்தில் இந்த Earbuds அனைவரிடமும் உள்ளது. இதனை பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் தான் தற்போது ஒரு புதிய மாடல் Buds அறிமுகமாக உள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

பிரபல நிறுவனங்களில் ஒன்றான சியோமி நிறுவனம் ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5) அதன் (TWS) இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது வரும் பிப்ரவரி 20-ம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.

மேலும் இவை Mi.com, Amazon.in, Flipkart, Mi Homes மற்றும் Xiaomi ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ரெட்மி பட்ஸ் 5 வண்ணங்கள் (Redmi Buds 5 Colours)

Redmi Buds 5 மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. அவை,

  • Fusion Purple
  • Fusion Black
  • Fusion White

மேலும் இதற்கு சிறப்பு சலுகையாக இந்த ஏர் பட்ஸ் வாங்கும்பொழுது Redmi Note 13 தொடர் ஸ்மார்ட்போன், Xiaomi அல்லது Redmi Pad போன்ற சாதனங்கள் வாங்கும் போது வெறும் 2,499 ரூபாய்க்கு இதனை பெற்று கொள்ளலாம். இந்த ஏர்பட்ஸில் பல புதிய அதிநவீன அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

நம்மில் பலரும் புதிய மொபைல் வாங்கினால் அதனுடன் சேர்த்து ஒரு சூப்பரான இயர்பட்ஸ் (Ear-buds) வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அதற்கு இந்த மாடல் இயர் பட்ஸ் சரியாக இருக்கும். இந்த சாதனத்தில் முக்கிய அம்சமாக 38 மணிநேர பேட்டரி ஆயுள் உள்ளது. மேலும் மிகவும் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் உள்ளது. இதன் விலை ரூ.2,999 ஆகும். இந்த சாதனம் அனைவருக்கும் மிகவும் பயணுள்ளதாக இருக்கும்.

Redmi Buds
இதையும் படியுங்கள்: iQOO Neo 9 Pro: கேம் விளையாட கரெக்டா இருக்கும்..! இதுவரை வந்த போனுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் பாருங்க..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular