Homeசெய்திகள்லைசன்ஸ் வாங்க புதிய நடைமுறை அறிமுகம்..! இனி அலைய வேண்டாம்..!

லைசன்ஸ் வாங்க புதிய நடைமுறை அறிமுகம்..! இனி அலைய வேண்டாம்..!

இந்த நவீன காலகட்டத்தில் அனைத்து வகையான சேவைகளும் ஆன்லைன் முறையில் தான் மாறிவருகிறது. ஆதார் முதல் பணப்பரிவர்தனை வரை அனைத்தும் ஆன்லைன் முறையில் தான் செயல்பட்டு வருகிறது. இது மக்களுக்கும் எளிமையாக இருப்பதால் அனைவரும் ஆன்லைன் முறைகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

இந்த வரிசையில் தான் தற்போது லைசன்ஸ் வாங்குவதற்கு புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் அனைவரும் எளிய முறையில் விரைவாகவும், அலைச்சல் இன்றியும் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

முன்பு இருந்த நடைமுறையின் படி ஓட்டுநர் உரிமம் பெற நாம் RTO அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும். ஆனால் இந்த புதிய நடைமுறையின் மூலம் ஓட்டுநர் வாகன ஓட்டிகள் RTO அலுவலகத்திற்கு செல்லமலேயே ஓட்டுநர் உரிமம் பெறலாம். மேலும் இந்த நடைமுறையின் படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் (Driving licence Online Application), ஆன்லைன் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

மேலும் இந்த நடைமுறையின் படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் (Driving licence Online Application), ஆன்லைன் மூலம் வினியோகிக்கப்படுகிறது. வாகனத்தை ஓட்டி காண்பிக்க வேண்டும். அந்த டெஸ்டில் தேர்ச்சி பெற்ற பின்பு நம்முடைய ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தினை பெற நாம் RTO அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம்.

Driving license Online Apply

நம்முடைய ஓட்டுநர் உரிமம் தபால் மூலம் வீட்டிற்கே அனுப்பப்படும். இந்த நடைமுறையானது இன்று (பிப்ரவரி 28) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறைக்கான (Driving licence Online Apply) உரிம கட்டணம் ரூ.520 மற்றும் தபால் செலவு ரூ.50 ஆகும். மேலும் முக்கியமாக விண்ணப்பதாரரின் முகவரி தவறாக இருந்தால் நாம் மீண்டும் ஆர்.டி.ஓ. அலுவலகம் சென்று, சரியான விலாசத்தை கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: பிரபல நடிகை டாப்ஸிக்கு திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular