இந்த நவீன காலகட்டத்தில் நாம் அனைவரும் நவீனமயமாக மாறி வருகிறோம். இந்நிலையில் நம்மில் பலரும் கிரெடிட் கார்டுகளை (Credit Card) பயன்படுத்தி இருப்போம். இன்று வரை பயன்படுத்தி தான் வருகிறோம். இந்நிலையில் தற்போது இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதில் சில முக்கிய நடைமுறைகள் (Credit Card New Terms) கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றினை இப்பதிவில் பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது நாம் பல சலுகைகளை பெற்று இருப்போம். நாம் பல வகையான போங்களின் கிரெடிட் கார்டுகளை வைத்து இருப்போம். இதன் மூலம் பேங்க நிர்வாகம் பல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த வரிசையில் தான் கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட வங்கியின் ஓய்வறை (லவுஞ்ச்) வசதி வழங்கப்படுகிறது.
மேலும் இந்த சலுகை மூலம் இந்த அறையில் (lounge) WIFI, உணவு, குளியல், ஓய்வெடுப்பது போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்நிலையில் தான் சமீப காலமாக இந்த லவுஞ்ச் வசதி பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
புதிதாக விதிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் (Credit Card New Rules) படி Yes Bank-ன் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள், ஒரு காலாண்டில் குறைந்தபட்சமாக ரூ.10,000-வரை செலவழித்திருக்க வேண்டும் என்றும் அதேபோல ICICI கிரெடிட் கார்டு பயனாளர்கள், ஒரு காலாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 35,000 செலவழிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விதி மாற்றம் 2024-ம் ஆண்டு ஏப்ரல்-1 தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது என்றும் எனினும் 2023-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி முதலே இந்த காலாண்டு தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: கார் விலையை அதிரடியாக குறைத்த டாடா..! இப்பவே வாங்கிடுங்க..! |