உலக அளவில் ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் தான் ஆப்பிள். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம். அதற்கு ஏற்றாற்போல தான் இந்த நிறுவனமும் தொடர்ந்து பல புதிய தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த வரிசையில் தான் தற்போது இந்த நிறுவனத்தின் புதிய மாடல் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுபோல தான் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய அசத்தலான ஐபோன் 15 சீரிஸை (IPhone 16 Series) அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த ஐபோன் 15 சீரிஸ் மொபைல்கள் டைட்டானியம் உலோகத்தால் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த மொபைல்களை டைட்டானியம் உலோகத்தால் உருவாக்கப்பட்ட முதல் ஐபோன் என்பதால் இது நல்ல வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில் தான் இப்போது ஐபோன் 16 சீரிஸ் வரும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த மாடல் போனின் பல சிறப்பம்சங்கள் இருக்கும் என்றும் அதில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஐபோன் 16 சீரிஸில் உள்ள ஐபோன் 16 ப்ரோ மொபைல் 6.3 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் மொபைல் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த போனில் முக்கியமான அம்சமாக இந்த போனை நாம் நீருக்கடியில் பயன்படுத்தலாம் என்றும், இதற்காக Underwater Mode என்னும் புதிய அம்சத்தை கொண்டுவரவுள்ளதாகவும தகவல் வெளியாகியுள்ளது. இந்த Underwater Mode அம்சத்தின் மூலம் நீருக்கடியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிய முறையில் எடுக்க முடியும்.
இது போன்ற இன்னும் பல முக்கியமான மற்றும் புதிய அம்சங்கள் இந்த மொபைலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஐபோன் 16 விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த போன் நிச்சயம் ஐபோன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக தான் இருக்கும். எனவே இந்த மொபைலின் அறிமுகத்திற்காக ஐபோன் பயனர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் என்று தான் கூறவேண்டும்.