Homeசெய்திகள்IPL 2025: சென்னை அணிக்கு தொடர் பின்னடைவு – ராஜஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி!

IPL 2025: சென்னை அணிக்கு தொடர் பின்னடைவு – ராஜஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி!

ஐபிஎல் 2025 தொடரில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவோன் கான்வே இருந்தாலும், கான்வே விரைவில் வெளியேறினார். பின்னர் வந்த உர்வில் படேல் ரன்கள் எதுவும் சேர்க்காமல் அவுட்டானார்.

அஷ்வின், ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் குறைவான ரன்களில் திரும்ப, பயங்கர தடுமாற்றம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையை சமாளித்தது மாத்ரே மற்றும் ப்ரூவிஸ் ஜோடி. மாத்ரே 43 ரன்கள், ப்ரூவிஸ் 42 ரன்கள், சிவம் துபே 39 ரன்கள், தோனி 16 ரன்கள் சேர்த்ததில், சென்னை அணி 20 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது. பின்னர், 188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்குத் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.

ஜெய்ஸ்வால் 36 ரன்கள், சஞ்சு சாம்சன் 41 ரன்கள், சூர்யவன்ஷி 57 ரன்கள், துருவ் ஜுரெல் 31 ரன்கள், ஹெட்மேயர் 12 ரன்கள் எடுத்ததன் மூலம் 17.1 ஓவரிலேயே 188 ரன்களை எட்டி ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்த தோல்வி, சென்னை அணிக்கான 10வது தோல்வியாகும் என்பதோடு, தொடரில் அவர்களின் பிளேஆஃப் வாய்ப்புகள் மேலும் குறைந்து விட்டதாகவும் பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular