செல்போன்களின் முக்கியத்துவம் எந்த அளவில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். உலகின் மொபைல் இல்லாத மக்களை நாம் எண்ணி கூறிவிடலாம் என்ற அளவுக்கு இன்றைய நவீன காலத்தில் அனைவரிடமும் போன் உள்ளது. போன் இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது என்ற நிலை இன்னும் சில காலங்களில் வந்துவிடும் போல.
இந்நிலையில் இந்த நவீன உலகத்திற்கு ஏற்றது போல பல நிறுவனங்கள் பலவிதமான புதிய மாடல் மொபைல்கை அறிமுகப்படுத்திதான் வருகிறது. இந்த வரிசையில் தான் தற்போது ஒரு புதிய மாடல் போன் அறிமுகமாக உள்ளது. அதுகுறித்த தகவல்களை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.
சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான iQOO தனது புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் iQOO நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) ஆகும். இந்நிறுவனம் இந்த போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த மொபைல் இந்தியாவில் வரும் பிப்ரவரி 22-ம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த மொபைலுக்கான முன்பதிவு கடந்த பிப்ரவரி 8-ம் தேதி முதல் தொடங்கியது.
மேலும் இந்த போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும், சில தகவல்களின் இந்த ஸ்மார்ட்போன் ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை விற்க்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் பல சலுகைகளும் இந்த போனை முன்பதிவு செய்பவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த போனுக்கு 2 வருட வாரண்டியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் முக்கிய அம்சமாக இந்த போன் கேமிங் விளையாட உகந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன்படி இந்த போன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப் மூலம் இயக்கப்படுகிறது, சூப்பர் கம்ப்யூட்டிங்கிற்கான Q1 சிப் உள்ளது. இந்த சிப்செட் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
இதுமட்டுமின்றி இந்த மொபைலை நாம் அதிக நேரம் பயன்படுத்தும் வகையில் 5160 mAh பேட்டரியைக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வேகமாக சார்ஜ் செய்ய டைப்-சி சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போன் 144 ஹெர்ட்ஸ் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் பின்புற கேமராவில் 50MP லென்ஸ் உள்ளது. மேலும் இரண்டாவது கேமரா 8MP ஆகும். மேலும் இந்த போன் இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: காதலர் தினத்தை முன்னிட்டு ஐபோன் 15-க்கு அதிரடி ஆஃபர்..! மிஸ் பண்ணிடாதிங்க..! |