Homeசெய்திகள்ஈஷா மஹாசிவராத்திரி நிகழ்ச்சி தியேட்டர்களில் ஒளிபரப்பு..! மகிழ்ச்சியில் மக்கள்..!

ஈஷா மஹாசிவராத்திரி நிகழ்ச்சி தியேட்டர்களில் ஒளிபரப்பு..! மகிழ்ச்சியில் மக்கள்..!

வருடம் தோறும் சிவராத்திரி நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. இதனை பல முறைகளில் மக்கள் கொண்டாடுகின்றனர். பலரும் கோவில்களுக்கு சென்று கடவுளை வணங்குவர். மேலும் சிலர் வீடுகளில் பூஜை செய்து இந்த நாளை கடைபிடிப்பர். ஆனால் பலரும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான ஈஷா கோவிலுக்கு சென்று வணங்கி மகிழ்வது உண்டு. ஆனால் பல மக்களால் அங்கு செல்ல முடியாத நிலை இருக்கும். அதற்காக தான் இந்த வருட ஈஷா மஹாசிவராத்திரியை (Isha Mahashivratri in Theatres) திரையரங்குகளில் ஒளிபரப்பவுள்ளனர்.

இந்த ஆண்டில் வருகிற 8-ம் தேதி சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் ஈஷாக் கோயிலில் கொண்டாட்ங்கள் கலைகட்டும். இந்த வருடமும் அதேபோல தான் நடைபெறவுள்ளது. கோவையில் உள்ள இந்த ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்களின் முன்னிலையில் மகா சிவராத்திரி விழா (Isha Mahashivratri 2024) நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் இந்தியாவின் தலைசிறந்த இசை கலைஞர்களான சங்கர் மகாதேவன், குருதாஸ் மான் ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இவர்கள் மட்டுமின்றி தமிழ் நாட்டுப்புற பாடகர் திரு. மகாலிங்கம், மும்பை தாராவி பகுதியை சேர்ந்த ராப்பர்ஸ் இசை குழுவினர் ஆகியோரும் இந்த விழாவில் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்த வருடம் பல இசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் மஹாசிவராத்திரி விழா இரவு முழுவதும் களைகட்ட உள்ளது. இந்த நிலையில் தான் இந்த நிகழ்ச்சி முழுவதும் PVR Inox திரையரங்குகளில் ஒளிப்பரப்படவுள்ளது.

Isha Mahashivratri
இதையும் படியுங்கள்: Maha Shivaratri 2024: மகா சிவராத்திரி வரலாறு…!

இந்த தகவல் தொடர்பாக PVR Inox நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரி கவுதம் தத்தா கூறுகையில், இந்த மஹாசிவராத்திரி விழாவை ஈஷாவுடன் இணைந்து முதல்முறையாக வெள்ளி திரையில் ஒளிபரப்பு செய்யும் வாய்ப்பை நாங்கள் ஒரு பாக்கியமாக கருதுகிறோம் என்று நெகிழ்ச்சியுடம் கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் அனைவரும் உங்களுக்கு அருகில் இருக்கும் PVR Inox திரையரங்குகளில் மூலம் பார்த்து பயன்பெறலாம் என்றும் கூறியுள்ளார். இதற்கான டிக்கெட்களை pvr-mahashivaratri.co என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: 3 நாட்களுக்கு முன் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்பு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular