இந்தியா மட்டுமின்றி உலக அளவில் அனைவராலும் அதிக அளவில் விரும்பப்படும் விளையாட்டுகளில் முதலிடத்தில் உள்ளது கிரிக்கெட் தான். இது நாம் அறிந்த ஒன்றே பலவிதமான விளையாட்டுகள் இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் விளையாட்டும் இதுதான்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய அணியாக இந்திய அணி உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக இருப்பது என்றால் அது நம் அணியில் உள்ள வீரர்கள் தான். அவர்கள் அணியின் வெற்றிக்காக எடுக்கும் முயற்சிகள் மற்றும் அவர்களுடைய திறமையும் தான்.
நம் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களை விளையாட்டில் அடித்துக் கொள்ளவே முடியாது. அதற்கு காரணம் அவர்களின் விளையாட்டு திறன் தான். மேலும் நம் இந்திய அணியின் வீரர்களும் கிரிக்கெட் விளையாட்டில் பல வகையான வரலாற்று சாதனைகளை செய்துதான் வருகின்றனர். ஆனால் தற்போது இந்திய அணியின் வீரரை பிண்னுக்கு தள்ளி முக்கியமான வரலாற்று சாதனையை இங்கிலாந்து வீரர் படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் இரண்டாம் போட்டியில் தான் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (Fast bowler James Anderson) இந்த வரலாற்று சாதனை நடந்துள்ளது.
முதல் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson) பங்கேற்கவில்லை. இந்நிலையில் இவர் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளார். மேலும் இந்திய அணியின் முக்கிய வீரராக உள்ள சுப்மன் கில்லின் விக்கெட்டினை எடுத்து அசத்தியுள்ளார். மேலும் இதற்கு முன்பாக இவர் 5 முறை கில்லின் விக்கெட்டினை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி மிகவும் வயதான வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருடைய வயது 41 வருடம் 187 நாட்கள் ஆகும். இதற்கு முன்னர் இந்திய அணியின் வீரர் லாலா அமர்நாத் (41 வருடம் 91 நாட்கள்) இருந்தது தற்போது அவரை பின்னுக்கு தள்ளி ஆண்டர்சன் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: IPL 2024 டைட்டிலுக்கு இத்தனை கோடியா..! நடந்தது என்ன? |