உலக அளவில் பல சாதனைகளை பெண்கள் தொடர்ந்து செய்து தான் வருகின்றனர். இந்த வரிசையில் தான் தற்போது ஒரு புதிய சாதனை ஒன்றை பிரிட்டிஷ் பெண் ஒருவர் படைத்துள்ளார். சர்வதேச ரீதியாக கடினமான போட்டியாக காணப்படும் அல்ட்ரா மாரத்தான் (Barkley Marathon 2024) போட்டியில் பிரித்தானிய பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் ஒரு சாதனையை படைத்துள்ளார். இதுக்குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்த பார்க்லி மாரத்தான் என்பது ஆண்டுதோறும் நடைபெறும் கடினமான போட்டிகளில் ஒன்றாகும். இந்த போட்டியில் அல்ட்ரா மரதன் போட்டியின் பல நிபந்தனைகள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் இந்த போட்டியினை 60 மணி நேரத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை.
இந்த போட்டியின் பாதை மிகவும் கடினமானதாக இருக்கும். இதன் காரணமாக இதுவரை இந்த போட்டியினை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் இதுவரை 20 பேர் மட்டுமே நிறைவு செய்துள்ளனர். இந்த நிலையில் தான் தற்போது அமெரிக்காவின் டெனஸ்ஸி பகுதியில் அல்ட்ரா மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 40 வயதான ஜஸ்மின் பாரிஸ் பங்கேற்றார்.
இந்த மரதன் போட்டியில் அந்த பெண்மணி 100 மைல்களுக்கும் அதிகமான தூரத்தை கடந்ததுடன் மட்டுமின்றி மொத்தம் 60 ஆயிரம் அடி உயரங்களையும் அவர் ஏறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மொத்தமாக அவர் ஏறியுள்ள மலைகளின் உயரம் இமய மலையை விட இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்மின் பாரிஸ் இந்த போட்டியை (Jasmin Paris in Barkley Marathon) நிறைவு செய்ததன் மூலம், இந்த போட்டியை நிறைவு செய்த முதலாவது பெண்மணி என்ற சாதனையை புரிந்துள்ளார். மேலும் அவர் இந்த போட்டியை 59 மணிநேரம், 58 நிமிடங்கள், 21 வினாடிகளில் நிறைவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்: 100 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் சந்திர கிரகணம் இன்று..! இந்தியாவில் பார்க்க முடியுமா? |