தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் பல சிறப்பான படங்களை தமிழ் திரையுலகிற்கு அளித்துள்ளார். இந்நிலையில் இவர் இறுதியாக நடித்த பெண்ணியின் செல்வன் திரைபடத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் காரணமாகவே இவர் கடந்த இரு ஆண்டுகளாக அருள்மொழிவர்மன் ஆக திரையரங்குகளில் ரசிகர்களை ஆட்சி செய்து வந்தார்.
இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு இவர் நடிப்பில் சைரன் திரைப்படம் வெளியானது. மேலும் இந்த படத்தில் அவர் தனது நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று விட்டார் என்று தான் கூறவேண்டும். இந்த நிலையில் அவர் மதுரையில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் படம் பார்த்துவிட்டு அதன் பிறகு ஜெயம் ரவி அதன் ரசிகர்களுடன் செல்ஃபி மற்றும் போட்டோக்களையும் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் தான் ரசிகர் ஒருவர் ஜெயம் ரவியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள முடியாத வருத்தத்தில் ஒரு டிவிட்டர் பதிவை பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ஜெயம் ரவி உடனடியாக பதில் (Jayam Ravi apologized to the fan) கொடுத்துள்ளார்.
ஜெயம் ரவியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியாத வருத்தத்தில் ஃபேன்ஸ் கிளப்பை மட்டும் அழைத்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கலாமே தேவையில்லாமல் எங்களை எல்லாம் ஏன் அழைத்தீர்கள் ஜெயம் ரவி. உங்களை நம்பி வந்ததற்கு நல்லா வச்சு செஞ்சீங்க, இன்னைக்கு ரொம்பவே வொர்ஸ்டான நாள், உங்களோட பிஹேவியர் சுத்தமா பிடிக்கல, உங்களை ரொம்பவே வெறுக்கிறேன் என ரசிகர் ஒருவர் ஒரு பதிவினை பதிவிட்டு இருந்தார்.
அதனை பார்த்த ஜெயம் ரவி (Jayam Ravi) உடனே அவருக்கு பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில் ஐயோ அந்த அளவுக்கெல்லாம் வெறுத்து விடாதீர்கள் என்றும் நேற்று மட்டும் சுமார் 300 பேருடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன். உங்களை எப்படி மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை. ஒன்றும் பிரச்சனை இல்லை சென்னைக்கு வாங்க, நாம செல்ஃபி எடுத்துக்கலாம் என உடனடியாக ஒரு பதிலை அளித்துள்ளார் ஜெயம் ரவி. தனது பிசியான ஷெட்யூலிலும் ரசிகர்களுக்காக இவர் போட்ட இந்த பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பதிலை பார்த்த அந்த ரசிகர் உடனே தனது பதிவை டெலிட் செய்துள்ளார். இவரின் இந்த செயல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.