கோலிவுட் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் சில நடிகர்கள் தான் முக்கிய நடிகர்களாக இருப்பர். அதுப்போல முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் பல வெற்றி படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடைய படங்கள் அனைத்தும் நல்ல கதைக்களத்துடன் இருக்கும். மேலும் இவரின் நடிப்பு படத்திற்கு படம் மாறுபடும். கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்று தான் கூறவேண்டும்.
கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இவரது நடிப்பை நாம் அனைவரும் பார்த்து இருப்போம். இந்த படத்தில் இவர் தான் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் புதிய படமாக (Jayam Ravi New Movie) சைரன் என்னும் படம் வெளியானது.
இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி திலகன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் இப்படத்தில் இவர் ஒரு குற்றவாளி ஆவார். இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாகவே அமைந்தது. இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். இந்த படத்தை அறிமுக இயக்குனரான அந்தோணி பாக்கியராஜ் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் தான் தற்போது சைரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ரிலீஸின் போதே சைரன் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஓடிடி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாருக்கு விற்கப்பட்டது. திரைப்படம் அதன் திரையரங்குகள் முடிந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் ஓடிடி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன் படி தான் தற்போது இந்த படம் ஓடிடியில் ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: பையா படத்தில் முதலில் நடிக்க இருந்த இரண்டு பிரபல நடிகைகள்..! யார் யார் தெரியுமா? |