முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக கட்சி இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு பகுதியும், பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு கட்சியும் என பிரிந்தது. அதன் பிறகு தொடர்ந்து பல பிரச்சனைகள் நடந்தது. அதில் முக்கியமாக அதிமுகவில் இரட்டை இலை சின்னம் எந்த பிரிவிற்கு என்ற பிரச்சனை தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில் தான் இரட்டை இலை சின்னம் (Irattai Ilai sinnam) தொடர்பாக முன்னால் முதல்வரான ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். மேலும் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஆதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நிர்ணயிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி பன்னீர்செல்வம் தலைமையில் இருந்த உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து பன்னீர் செல்வம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லாது என்றும் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வெளியானது. அதன் பிறகு இந்த தீர்ப்பை எதிரித்து ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் இரட்டை இலை தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை 3 மணிக்கு வழங்கப்படும் (Irattai Ilai Chinnam Theerpu) என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா நாளை 3 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறார்.
இதையும் படியுங்கள்: நடிகர் பார்த்திபனின் மகள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா..! வைரலாகும் குடும்ப புகைப்படம்..! |