2025 ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. இந்த மாதத்தில் மொத்தம் 12 நாட்கள் வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தங்களது வங்கி பணிகளை திட்டமிடுவது நல்லது என வங்கித்துறை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
முக்கிய விடுமுறை தேதிகள்:
- ஜூன் 6 (வெள்ளி): திருவனந்தபுரம் மற்றும் கொச்சி – பக்ரித் (Eid-ul-Adha) காரணமாக வங்கிகள் மூடப்படும்.
- ஜூன் 7 (சனி): பக்ரித் காரணமாக, கீழ்கண்ட நகரங்களில் வங்கிகள் செயல்படாது:அகர்தலா, ஐஸ்வால், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், குவஹாத்தி, ஹைதராபாத் (ஆந்திரா மற்றும் தெலுங்கானா), இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கோஹிமா, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர்.
- ஜூன் 11 (செவ்வாய்): காங்டாக் மற்றும் சிம்லா – சந்த் கபீர் ஜெயந்தி முன்னிட்டு வங்கிகள் மூடப்படும்.
- ஜூன் 27 (வெள்ளி):புவனேஸ்வர் மற்றும் இம்பால் – ரதயாத்திரை காரணமாக வங்கி விடுமுறை.
- ஜூன் 30 (திங்கள்):மிசோரம் – ஐஸ்வால் – ரெம்னா நி பண்டிகை காரணமாக வங்கிகள் மூடப்படும்.
மாதாந்திர சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்:
- ஜூன் 14 மற்றும் ஜூன் 28 – இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் (விடுமுறை)
- ஜூன் 1, 8, 15, 22, 29 – ஞாயிற்றுக்கிழமைகள் (வங்கிகள் இயங்காது)
ஆன்லைன் வங்கிப் பணிகள் தொடரும்:
வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நேஷனல் இண்டர்நெட் பேங்கிங், மொபைல் அப்புகள், UPI போன்ற சேவைகளை பயன்படுத்தி தங்கள் பணிகளை முடிக்க முடியும். இந்த வகையான டிஜிட்டல் சேவைகள் 24/7 இயங்குவதால், மக்கள் எவ்வித தடையுமின்றி பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
மாநில வாரியாக வித்தியாசம்:
RBI வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியல் என்பது மாநிலங்களின் பண்டிகைகள் அடிப்படையில் மாறுபடக்கூடியது. எனவே, உங்கள் மாநிலத்திற்கேற்ப தகுந்த விடுமுறை நாட்களை உறுதி செய்ய, RBI-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடலாம்.