தமிழ் சினிமாவில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும், அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்த (Kadhal Desam vineeth) நடிகர் தான் வினீத். இவர் 90ஸ்களின் கனவு நாயாகனாக தன் நடிப்பால் பலரையும் கட்டி ஈர்த்தவர் தான் வினீத். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்தாலும் பலரை தன் பக்கம் ஈர்த்தவர்.
தமிழ் திரைப்படங்களையும் தாண்டி, மலையாளம், தெலுங்கு ஆகிய பல மொழிப்படங்களில் நடித்துள்ளார் வினீத். இவர் நடித்த காதல் தேசம் படத்தில் உன்னை காணவில்லையே நேற்றோடு, எங்கு தேடிப்பார்க்கிறேன் காற்றோடு என்ற பாடல் வரிகளை கேட்டால் நம் நினைவுக்கு வருவது இவரின் முகம் தான்.
தமிழ் சினிமாவில் ஆவாரம் பூ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் வினீத். இவர் நடித்த முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல நடிகன் என்ற பெயரை பெற்றார். அப்போது அவருக்கு தமிழ் நாட்டின் திரைப்பட ரசிகர் சங்கத்தின் சிறந்த புதுமுகம் என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. இதனால் இவர் பல படங்களில் நடிகனாகவும், முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வந்தார்.
இவர் நடிகர் (Actor Vineeth) மட்டுமல்ல, ஒரு பரதநாட்டிய கலைஞர். பல கச்சேரிகளில் பரதநாட்டியம் ஆடி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். வெளிநாடுகளில் நடக்கும் பரநாட்டிய நிகழ்ச்சிக்கு சென்று அங்கும் அவரது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்றதால் பல திரைப்படங்களை இதனால் இழந்துள்ளார். இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்-ஆகவும் தனது திறமையை சினிமா துறையில் வெளிக்காட்டியுள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் சில காலங்கள் காணாமல் போயிருந்தார். இவர் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சந்திரமுகி திரைப்படத்தில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து அதில் பரதநாட்டிய கலைஞராகவே நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பார்.
இவர் கடந்த 2004-ம் ஆண்டு ப்ரிசில்லா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும் உள்ளனர். தற்போது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் (Kadhal Desam Vineeth image) இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் வினீத்தின் மனைவி இவரா என்றும், இவ்வளவு பெரிய மகளா என்றும் சமூக வலைதளத்தில் (Kadhal Desam Vineeth family) புகைப்படங்களை பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: Jeans படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தவர் இவரா? வாய்ப்பை தவறவிட்ட முன்னணி நடிகர்… யார் தெரியுமா? |