லைஃப்ஸ்டைல்

Kadi Jokes in Tamil..! நம்மை சிரிக்க வைக்கும் தமிழ் கடி ஜோக்ஸ்..!

Kadi Jokes in Tamil பற்றி இப்பதிவில் பார்க்கவுள்ளோம். அதற்கு முன்னர் நம் வாழ்வில் சிரிப்பின் முக்கியத்துவத்தை இனி பாரக்கலாம். மனிதர்களின் வாழ்வில் முக்கியமான ஒன்று ஆனால் இந்த காலக்கட்டத்தில் பலரும் மறந்துபோன ஒன்று எனறால் அது சிரிப்பு. இன்றைய இயந்திர வாழ்வில் நம்மில் பலரும் சிரித்து மகிழ்வதை மறந்தே போய்விட்டோம். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழி 100% உண்மை தான் போல, அனைவரும் வாழ்விலும் துன்பம் வரும் ஆனால் அதனை என்னி தளர்ந்து விடாமல் சிறு புண்ணகையுடன் அதை கடந்து செல்ல வேண்டும்.

எனவே தான் நம் இணையதளத்தில் மக்களை சிரிக்கவைக்கும் விதமாக தமிழ் கடி ஜோக்ஸ் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவில் இனி கடி ஜோக்ஸ்களை பார்க்கலாம்.

கடி ஜோக்ஸ் (Kadi Jokes With Answers)

ஜோக்ஸ் விடை
நெஞ்சைத் தொடும் ஒரு வார்த்தை சொல்லு பனியன்
ராமன் கடன் வாங்கினான். இது என்ன காலம் சொல்லு?அது ராமனோட கஷ்டகாலம் சார்
பல் வலிக்க முக்கியமான காரணம் என்ன?பற்கள் தான்
ஏண்டா உனக்கு வரலாறு பிடிக்காதுன்னு சொல்ற?சார் நான் விஜய் ரசிகன்
பசுமாடு ஏன் பால் தருகிறது?அதனால் காப்பி டீ தர முடியாது.
மரம் செடி இல்லாத காடு எது?சிம் கார்டு
ஒரு பச்சை கற்களை கடலில் வீசி இருந்தால் அது என்னவாகும்?ஈரமாகும்
கீழே விழுந்தாலும் காயம் படாமல் இருப்பது எது?மழை
கணக்கு பரிட்சையில் கணக்கு போடாமல் எதுக்குடா இப்படி டான்ஸ் ஆடிட்டு இருக்க?சார் நீங்க தான் சொன்னீங்க ஸ்டெப்ஸ்க்கு மார்க் உண்டு என்று
எந்த வில்லை நாம கட்ட முடியாது?வானவில்

Sema Kadi Jokes in Tamil

ஜோக்ஸ் விடை
பாட்டி நான் ஓட்டப்பந்தயத்திற்கு போறேன் என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க?நல்லா மெதுவா பார்த்து ஓடிட்டு வா கன்னு
குடிக்க முடியாத டீ எது?கரண்டி
ஒரு மாமி இட்லி தலை வைத்து இருக்கிறார்கள் ஏன்?ஏன்னா அந்த இட்லி மல்லிகை பூ போல இருந்துச்சாம்.
லெட்டர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?லெட்டர் கிழிச்சிட்டு படிப்போம் புத்தகத்தை படிச்சிட்டு கிழிப்போம்.
எலிக்கு ஏன் வால் இருக்கு?எலி செத்த பின்னாடி தூக்கி போடுறதுக்கு தான்
பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது?தொப்பை
ஏண்டா மெதுவா லட்டர் எழுதுகிரா?எங்க அம்மாவுக்கு வேகமா படிக்க வராதது தான்
டாக்டர் கண் ஆபரேஷன் பண்றதுக்கு முன்னால சூரியன் வணங்க சொல்றீங்களே ஏன்?கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண முடியாது இல்ல அதுக்கு தான்
அதிக வெயிட் தூக்குற பூச்சி எது?மூட்டை பூச்சி
தாஜ்மகாலுக்கு பெயிண்ட் அடிச்சா என்ன ஆகும்?செலவாகும்

Kadi Jokes in Tamil With Answers Images

அமெரிக்காவில் பிறந்த குழந்தை பல்லு என்ன கலர் இருக்கும்?
விடை: பிறந்த குழந்தைக்கு தான் பல்லே இருக்காதே

தமிழ் கேடி ஜோக்ஸ் (Tamil Kadi Jokes With Answers)

ஜோக்ஸ் விடை
நாம ஏன் படுத்துகிட்டே தூங்குறோம்?நின்னுகிட்டே தூங்கினால் கீழே விழுந்து விடுவோம்
கொசு நம்ம வீட்டுக்கு வராமல் இருக்க என்ன பண்ணனும்?அது கிட்ட நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும்
நாம் எந்த எழுத்தை எழுத முடியாது?நம் தலையெழுத்தை
வெற்றிலையுடன் சேராத பாக்கு எது?மைசூர் பாக்
கண்ணகி மதுரையை எறித்தால் இது எந்த காலம்?பயர் சர்வீஸ் இல்லாத காலம் சார்
கோழி ஏன் முட்டை போடுது?ஏன்னா அதுக்கு ஒன்னு ரெண்டு மூணு போட தெரியாது சார்.
இரும்பு மனிதர் என்று யாரை அழைக்கலாம்?மனைவியின் அடியே தாங்கிக் கொண்டு இருப்பவரே
எந்த பூச்சியை தொட்டால் சாக் அடிக்கும்?மின் மினி பூச்சி
ரெண்டு பேர் ஓட்டலுக்கு போறாங்க நாலு நாள் இட்லி ஆர்டர் செய்து சாப்பிடறாங்க அதை சாப்பிட்டதும் அவங்களுக்கு புட் பாய்சன் ஆயிடுச்சு ஏன்?ஏன்னா அது நாலு நாள் இட்லி
திருவள்ளுவர் ஒரு மிமிக்கிரி ஆர்டிஸ்ட்னு எப்படி சொல்ற?1330 குரளு(ல்)க்கு சொந்தக்காரர் ஆச்சே! அதான்

மாணவர்களுக்கான கடி ஜோக்ஸ் (Kadi Jokes in Tamil Students)

ஜோக்ஸ் விடை
எல்லா Stage-லயும் Dance ஆடலாம் ஆனா ஒரு Stage-ல மட்டும் Dance ஆட முடியாது அது என்ன Stage?கோமா Stage
ஒரு மாசத்தில் எத்தனை நாள் இருக்கும்?3 நாலு தான் 4,14,24
ரொம்ப நாள் உயிரோட இருக்க என்ன பண்ணனும் ?சாகமா இருக்கணும்
Bank– ல பணம் எடுக்க போனவருக்கு Shock அடிச்சதா ஏன்?ஏன்னா அது Current Account
தானத்தில் பெரிய தானம் எது?மைதானம்
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போறீங்க?டாக்டர் தான் சுகர் இருக்கானா அடிக்கடி செக் பண்ண சொன்னாரு
டாக்டர் என்ன நாய் கடித்து விட்டது. எந்த இடத்தில?பெருமாள் கோவில் சந்துல.
எறும்பு பெருசா யானை பெருசா?அப்படியெல்லாம் சொல்ல முடியாது மேடம் பிறந்த தேதி வேணும்
தீபாவளிக்கும் பொங்கலுக்கு என்ன வித்தியாசம்?தீபாவளி அன்னைக்கு பொங்கல் சாப்பிடலாம் ஆனால் பொங்கல் அன்னைக்கு தீபாவளி சாப்பிட முடியாது
ஒருத்தர் கல்யாணம் பண்றது விவசாய கடன் கேட்டார் ஏன்?ஏன்னா அது ஆயிரம் காலத்துப் பயிர்ல

விடைகளுடன் கடி ஜோக்ஸ் (Kadi Joke With Answer)

பில்கேட்ஸ் கிட்ட போய் உட்கார் என்று சொன்னா, அவர் உட்கார மாட்டாரு! ஏன் தெரியுமா? தெரியலையே! ஏன்னா, அவருக்கு தமிழ் தெரியாதுல்ல!

மொக்க ஜோக்ஸ் (Mokka Kadi Jokes)

ஜோக்ஸ் விடை
English Letter-ல B மட்டும் பிரஸா இருக்குமாம் ஏன்?ஏன்னா அது AC-க்கு நடுவுல இருக்கு
எனக்குள்ள இருக்குற திறமை மறைஞ்சு இருக்கு, என்ன திறமை?மறைஞ்சு இருக்குறதுனால் தெரியல..
ஏன் தண்ணீ தெளிச்சு கோலம் போடுராங்க தெரியுமா? ஏன்?கோலம் போட்டு தண்ணீ தெளிச்சா கோலம் அழிங்சிடும்…
நம்ம நடந்து போகும் போது பூனை குறுக்க வந்தா என்ன அர்த்தம்?பூனை எங்கையே போகுதுனு அர்த்தம்…
அப்பா நான் படிக்க போகல. ஏன்டா?“கம்ப்யூட்டர்” படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றாரு. அப்புறம் நான் எதுக்கு படிக்கணும்.
உன் ஆசிரியர் ரொம்ப நல்லவர்னு எப்படி சொல்ற?ஞாயிற்றுக்கிழமை கூடாது டியூஷன் வைத்து பாடம் நடத்தி எங்கள தூங்க வைச்சிடுவார்
கருப்பா இருக்கிற மேகங்கள் மட்டும் ஸ்பீடா நகரும். ஏன் தெரியுமா?ஏன்னா அது “கார்” மேகம் அதனால தான் ஸ்பீடா நகருது.
அந்த டாக்டர் போலினு எப்படி சொல்றீங்க?வயித்துல கிருமி இருக்கு பூச்சிமருந்து தாங்கனு கேட்டேன். உடனே மருந்துல ஒரு பூச்சிய போட்டு கொடுத்துட்டாரு.
மன்னா! எதிரி நாட்டு மன்னர் வீரத்தில் சிறந்தவராக இருக்கிறார்அமைச்சரே! ஒவ்வொருக்கும், ஒவ்வொரு திறமை இருக்கும். அவரை என்னிடத்தில் “ஓட்டப்பந்தயம்” வரச்சொல்லும் யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஸ்டாண்டுல நிக்கிற எல்லா பஸ்சிலும் ஏறி சிறிது நேரம் இருந்துவிட்டு பிறகு இறங்குறியே! ஏண்டா?நம்ம தமிழ் ஐயா தான் எங்கே “திருக்குறள்” எழுதிப் போட்டு இருந்தாலும் அதை படிக்க வேண்டும்னு சொல்லி

Kadi Jokes Tamil Latest

50 ரூபா கடன் கிடைக்குமா? சுத்தமா பணம் இல்லைங்க! “அழுக்கா” இருந்தாலும் பரவாயில்லைங்க!

Kadi Jokes Question and Answer

அப்பா: ஏன்டா மணி! பரீட்சையில் எல்லா பாடத்திலேயும் கம்மியா மார்க் எடுத்து இருக்க?

மகன்: நீ தான அப்பா எல்லாத்துலையும் சிக்கனத்தை கடைபிடிக்கனும்னு சொன்ன. அதான் மா.

இதையும் படியுங்கள்: Realme C67 5G New Launch: வெறும் 14000 ரூபாயில் புதிய அறிமுகம்…

தங்கதுரை கடி ஜோக்ஸ் (Thangadurai Kadi Jokes)

அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர?
தம்பி : டாக்டர் தான் ‘அறை’மூடி மருந்து சாப்பிட சொன்னார்.
Friend: நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்ககும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?
Me: போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.
“ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல…?”
“சார்… எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு”.
அந்த ஆளு பஞ்சாயத்து தலைவரா… ரொம்ப குள்ளமா இருக்காரே
கட்டை- பஞ்சாயத்து பண்றவருங்க
குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி?
அது மேல தான் “Weight” போடரோம் இல்ல?

இப்பதிவில் நாம் Best Kadi Jokes பற்றி இப்பதிவில் பார்த்துள்ளோம். இவை அனைத்தும் உங்கள் முகத்தில் புண்ணகையை வரவைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதையும் படியுங்கள்: Agni Natchathiram 2024: செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என்ன?
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago