Homeஆன்மிகம்Kagam karaiyum palangal: காகம் எந்த திசையில் கரைந்தால் என்ன பலன்..!

Kagam karaiyum palangal: காகம் எந்த திசையில் கரைந்தால் என்ன பலன்..!

Kagam karaiyum palangal: நமது ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலவகையான சாஸ்திரங்களை வகுத்து வைத்துள்ளோம். குறிப்பாக நமது ஜாேதிட சாஸ்திரம் என்பது அறிவியலை மையமாக கொண்டு தான் எழுதப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த சாஸ்திரங்களை (kagam karaiyum sasthiram) வைத்து தான் இன்றும் நாம் பல வகையான நிகழ்விற்கு அடிப்படைகளை வகுத்து வருகின்றோம்.

நாம் இதனை மூடநம்பிக்கைகள் என்று எண்ணிவிடவும் கூடாது. காரணம் அறிவியலை மையப்படுத்தி வகுக்கப்பட்ட இந்த சாஸ்திரங்கள் தான் இன்றளவும் அனைவராலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பார்த்தால் பறவைகள், விலங்குகள், ஊர்வன என அனைத்து வகையான உயிரினங்களையும் மையப்படுத்தி சகுனங்களை வகுத்து வைத்துள்ளோம்.

பல்லி விழும் பலன்கள், கெளலி சாஸ்திரம், கனவு பலன்கள் போன்ற எண்ணற்ற பலன்கள் உள்ளன. அந்த வகையில் நாம் இன்று பார்க்கும் பலன் காகம் கரையும் (Astrological facts about Crow In Tamil) பலன்கள். காகம் நமது நாட்டில் பரவலாக பார்க்கப்படுகிற ஒரு பறவை. இந்தியாவில் அதிகமாக காணப்படும் பறவை தான் இந்த காகம்.

பறவைகளுக்கு பொதுவாக இயற்கையில் நிகழக போகும் மாற்றங்களை முன்கூட்டியே கணிக்கும் வல்லமை உண்டு. அதனால் தான் நமது முன்னோர்கள் பஞ்ச பட்சி என்னும் சாஸ்திரத்தை வகுத்து வைத்துள்ளனர். இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் முக்கிய பறவையாக இருப்பது காகம். காகம் இந்து ஜோதிடத்தில் ஒரு முக்கிய பறவையாக பார்க்கப்படுகிறது.

இந்து சாஸ்திரங்களின்படி காகம் நமது பித்ருக்கள் ஆவார்கள். இறந்து போன முன்னோர்களாக நாம் காக்கைகளை பார்க்கிறோம். நம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் காெடுக்கும் போது காகத்திற்கு உணவு வைத்த பிறகு தான் நாம் அதனை உண்போம். இவ்வாறாக காகம் நமது அன்றாட வாழ்வியலில் நீங்காத ஒரு இனமாக மாறிவிட்டது. அதனால் தான் நம் வாழ்வில் நிகழவிருக்கும் நிகழ்வுகளை காகம் நமக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் என்று நம்பப்படுகிறது.

நவகிரகத்தில் சனிபகவானின் வாகனமாக காக்கை உள்ளது. இப்படி பல சிறப்புகளை கொண்ட காகம் நம் வீட்டிலோ, அல்லது வீட்டின் அருகிலோ கரைந்தால் அல்லது எச்சம் இட்டால், அது எந்த திசையை பார்த்து கரைகிறதோ அதனை வைத்து நமக்கு ஏற்பட இருக்கும் பலன்களை நாம் எளிமையாக கண்டுபிடித்துவிடலாம். நாம் இந்த பதிவில் Kagam karaiyum palangal பற்றி பார்க்க உள்ளோம்.

பயணங்களின் போது காகம் குறுக்கிட்டால்Kagam karaiyum palangal

பொதுவாக நாம் ஒரு பயணத்திற்கு தயாராகி கொண்டிருப்போம். அந்த சமயத்தில் காகம் வலமிருந்து இடமாக சென்றால் நீங்கள் செல்லும் பயணம் சிறப்பாக அமையும். அதாவது தன லாபத்தை கொடுக்கும்.

அதுவே பயணங்களின் போது காக்கை இடமிருந்து வலமாக சென்றால் தன நஷ்டத்தை கொடுக்கும்.

பயணம் செய்ய தயாராக இருக்கும் போதோ இல்லை பயணம் செல்லும் போதோ காகம் உங்களை நோக்கி கரைந்தபடி வந்தால், உங்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

காகம் தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுப்பதை கண்டால் உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கவிருப்பதை குறிக்கிறது. இது நல்ல சகுணமாக பார்க்கப்படுகிறது.

காகத்தின் செயல்களும் அதன் விளைவுகளும்

காகங்கள் இரவில் கரைந்து கொண்டே பறந்தால் அந்த பகுதியில் ஏதோ ஆபத்து ஏற்படபோவதை குறிக்கிறது. பொதுவாக காகம் காரணம் இல்லாமல் கரையாது. ஆனால் விடாமல் கரைந்து (kagam kathinal enna palan) கொண்டிருந்தால் பஞ்சம் வர போவதை குறிக்கிறது என்று அர்த்தம். ஒருவர் வீட்டை சுற்றி சுற்றி பறந்து வந்தால் அவர்களுக்கு எதிரிகளால் தொல்லை ஏற்படபோவதை குறிக்கிறது என்று அர்த்தம்.

ஒரு ஊரில் காகங்கள் கூட்டமாக மேலே பறந்தால் அந்த ஊரில் ஏதோ பெரிய ஆபத்து வர போவததை குறிக்கிறது. அதே சமயம் காகம் உங்கள் வீட்டில் உள்ள ஒரு பொருளை தூக்கி சென்றால் இது அபசகுணமாக பார்க்கப்படுகிறது.

காகம் எந்த பொருட்களையாவது, அதாவது தானியங்கள், அரிசி, பூக்கள், காய்கறிகள் போன்றவற்றை வீட்டில் கொண்டு வந்து போட்டால் அதன் மூலம் நமக்கு லாபம் பெருகும் என்பது நம்பிக்கை. ஒரு வீட்டில் எந்த நிற பொருட்களை காகம் கொண்டு வந்து போடுகிறதோ அதாவது, சிவப்பு நிற பொருட்களை கொண்டு வந்து போட்டால் தங்கம் சேரும் என்றும், வெள்ளை பொருட்களை போட்டால் வெள்ளி போன்ற பாெருட்கள் சேரும் என்றும், பஞ்சு போன்ற பொருட்களை போட்டால் வஸ்திரம் பெருகும் என்றும் அர்த்தம்.

காகம் எச்சமிட்டால் என்ன பலன்

பொதுவாக காகம் நம் மீது எச்சமிட்டால் (kagam echam palangal in tamil) அது நல்ல பலனை கொடுக்கும். காகம் நம் மீது எச்சமிடுவது ஒரு சுபகாரியமாகும். நமக்கு ஏற்பட போகும் தீமைகளில் இருந்து காகம் நம்மை பாதுகாக்க போவதை உணர்த்துகிறது. நாம் பயணம் கிளம்பும் போது காகத்தின் எச்சில் நம் மீது பட்டால் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு அதன் பிறகு செல்வது நன்மை தரும்.

பயணத்தின் போது காகம் செருப்பு, குடை போன்ற பொருட்கள் மீது எச்சமிட்டால் அந்த பயணத்தின் போது உணவு பஞ்சம் இருக்காது.

காகத்தின் எச்சில் பட்டால் பயப்படாமல், நன்மை என்று நினைத்து பயணத்தை நீங்கள் தொடங்கலாம்.

ஒரு வீட்டின் அருகே வாசலில் முன் காகம் விடாமல் கரைந்து கொண்டிருந்தால் அந்த வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்பது வழக்கம்.

மேலும் படிக்க: Palli Sollum Palangal: பல்லி எந்த திசையில் சத்தமிட்டால் நல்லது..!

காகம் கரையும் பலன்களும் அதன் திசைகளும்

காகம் பொதுவாக கரையும் போது அது எந்த திசையில் அமர்ந்து எந்த திசையை (kagam entha thisaiyil kathinal enna palan) நோக்கி கரைகிறது வைத்து பலன்கள் இருக்கும்.

கிழக்கு திசை

காகம் கிழக்கு திசையை நோக்கி கரைந்தால் நாம் எடுக்கும் முயற்சிகளில் நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒரு செயலுக்காக நாம் எடுக்கும் முயற்சிகளில் நமக்கு நன்மை உண்டாகும்.

மேற்கு திசை

மேற்கு திசை நோக்கி காகம் கரைந்தால் நமது வீட்டில் செல்வம் சேர பாேவதை குறிக்கிறது. குறிப்பாக உப்பு, மாமிசம், தானியங்கள் போன்றவற்றால் உங்கள் வீட்டில் லாபங்கள் பெறுக போவததை குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல் உங்களை தேடி ஒரு இனிமையான செய்தி வரபோவததை குறிக்கிறது.

தெற்கு திசை

தெற்கு திசையில் காகம் கரைந்தால் நன்மையான பலன்களை தான் கொடுக்கும். சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. புது நட்பு வட்டாரங்கள் உங்களை தேடி வருவார்கள். நினைத்த காரியங்கள் நடக்கும்.

வடக்கு திசை

வடக்கு திசையில் காகம் கரைந்தால் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் உள்ளவர்களிடன் அனுசரித்து போவது நன்மையை கொடுக்கும். செய்யும் செயல்களில் தாமதங்கள் ஏற்படலாம். அதனால் பொறுமையாக செயல்படுவது நல்லது.

தென்கிழக்கு திசை

தென்கிழக்கு திசையை நோக்கி கரைந்தால் எதிரிகள் குறைவார்கள். நீண்ட நாட்களாக பகையில் இருந்தவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். பகைகள் விலகும். நன்மைகள் நடக்கும்.

வடகிழக்கு திசை

வடகிழக்கு திசையில் காகம் கரைந்தால் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். காரணம் உங்களிடம் உள்ள விலைமதிப்பான பொருட்கள் காணாமல் போகலாம். நீங்கள் நினைத்த காரியம் நடக்காமல போகலாம். எனவே கவனமாக இருப்பது மிக அவசியம்.

தென்மேற்கு திசை

தென்மேற்கு திசையில் காகம் கரைந்தால் உங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். உங்களுக்கு பதவி உயர்வு அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

வடமேற்கு திசை

வடமேற்கு திசை நோக்கி காகம் கரைந்தால் எடுத்த காரியங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் நினைத்த காரியங்கள் நடக்க சில தாமதங்கள் ஏற்படலாம். எனவே கவனமாகவும், பொறுமையாகவும் நீங்கள் தொடங்கிய காரியங்களை செய்தால் நன்மை.

காகம் தலையில் தட்டினால் என்ன பலன்

kagam thalaiyil kothinal enna palan

காகம் நம் தலையில் அமர்ந்து செல்வது (kagam thalaiyil kothinal enna palan) குறித்தோ அல்லது தட்டி செல்வதால் நாம் பயம் கொள்ளாமல் இருக்க வேண்டும். காகம் நம் தலையில் தட்டினால் அதற்கான காரணம் நமக்கு எதிர்காலத்தில் ஏதாவது உடல் பிரச்சனைகள் அல்லது ஏதாவது நடக்க இருந்தால் அதனை காகம் நம் தலையில் தட்டி எச்சரித்துவிட்டு செல்கிறது. நம் ஆரோக்கியத்தை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதேசமயம் காகம் நம் தலையில் தட்டி சென்றால் நம் முன்னோர்களுக்கு நாம் எதுவும தர்ப்பணம் கொடுக்காமல் இருந்தால் அதனை நமக்கு நினைவுப்படுத்தும் விதமாகவும் காகம் நம் தலையில் தட்டி செல்லும்.

மேலும் படிக்க: Palli Vilum Palangal tamil: பல்லி நம் உடம்பில் எங்கு விழுந்தால் என்ன பலன்..!

FAQS

1. காகம் தலையில் தட்டினால் என்ன அர்த்தம்?

காகம் நம் தலையில் தட்டினால் நமக்கு ஏற்பட போகும் ஆபத்துகளில் இருந்து நம்மை எச்சரிக்கிறது என்று அர்த்தம்.

2. காகம் கூடு கட்டினால் என்ன பலன்?

காகம் கூடு கட்டுவது ஒரு நல்ல சகுணமாக பார்க்கப்படுகிறது. காகம் யார் வீட்டிலேயோ அல்லது தோட்டத்திலோ கூடு கட்டினால் அந்த உரிமையாளருக்கு செல்வம் சேரும்.

3. கனவில் காகம் வந்தால் என்ன பலன்?

கனவில் காகத்தை காண்பது அவ்வளவு நல்ல சகுணம் இல்லை. கனவில் காகம் வருவது நம் பித்ருக்களுக்கு நாம் சரியாக தர்பணம் கொடுக்கவில்லை போன்றவற்றை குறிக்கிறது.

4. காகம் தலையில் அடித்தால் என்ன பரிகாரம் செய்வது?

காகம் நாம் பயணத்திற்கு தயாராகும் போதோ அல்லது நின்று கொண்டிருக்கும் போதோ தலையில் அடித்துவிட்டால் அது குறித்த கவலைபட வேண்டாம். நீங்கள் தலை குளித்துவிட்டு அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று விளக்கு போட்டு வரலாம்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular