கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய திட்டம் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம். திமுக கட்சி ஆட்சி அமைத்த பின்னர் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) என்னும் திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல இல்லத்தரசிகள் பயணடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த திட்டம் நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த நேரத்தில் லோக் சபா தேர்தல் வரவுள்ளது. இது குறித்த அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில் தான் இந்த தேர்தலுக்குப் பின்னர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Magalir Urimai Thogai) விரிவுபடுத்தப்படும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியிடம் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடருமா என கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் எந்த ஒரு மாற்றமும் இன்றி மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என உறுதி அளித்துள்ளார். இந்த தகவல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா..! |