தமிழ் சினிமாவில் பல வருடங்கள் இசையமைப்பாளராக இருந்து ஜிவி பிரகாஷ் சில வருடங்களுக்கு முன்பு வெளியான டார்லிங் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இவர் கதாநாயகனாக நடித்த முதல் படமே இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் இவர் நடித்த கள்வன் என்னும் படம் வெளியானது.
இந்த கள்வன் படம் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தினை இயக்குனர் பிவி ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ளார். மேலும் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். மேலும் கமெடியனாக கேபிஒய் தீனா நடித்துள்ளார். இவர்கள் மட்டுமின்றி பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தினை தயாரிப்பாளர் டில்லி பாபுவின் அக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கள்வன் படத்தின் பாடல்களுக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பின்னனி இசைக்கு இசையமைப்பாளர் ரீவா இசையமைத்துள்ளார்.
இந்த படம் அதிரடி திரைக்கதையில் உருவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. கள்வன் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் 2023-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி வெளியானது. இந்த கள்வன் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இப்பதிவில் கள்வன் படத்தின் திரைவிமர்சனம் (Kalvan Movie review in Tamil) பற்றி பார்க்கலாம்.
கள்வன் திரைவிமர்சனம் (Kalvan Movie Thiraivimarsanam)
கதையின் கரு (Kalvan Movie Story in Tamil)
இந்த கள்வன் படத்தின் கதை சத்தியமங்கலம் அருகே ஒரு கிராமத்தில் தொடங்குகிறது. அங்கு திருடர்களாக ஜி.வி. பிரகாஷ் மற்றும் கேபிஒய் தீனா இருவரும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் தங்கள் ஊரில் இதற்கு மேல் திருட இடமில்லை என்பதை அறிந்து பக்கத்து ஊரில் திருட செல்கின்றனர்.
அப்போது தான் படத்தின் கதாநாயகி இவானா வீட்டுக்கு திருட செல்லும் போது வசமாக சிக்கி கொள்கிறனர். அதன் பிறகு ஹீரோ மற்றும் ஹீரோயின் இடையே காதல் மலர்கிறது. பிரச்சனைகளுக்கு பிறகு ஹீரோயினை திருமணம் செய்து ஊருக்கு கூட்டிட்டு வருவார் என அனைவரும் எதிர்பார்க்கும் வேலையில் தான் கதையில் ட்விஸ்ட். ஜிவி பிரகாஷ் வயதான பாரதிராஜாவை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

அதன் பிறகு ஜி.வி. பிரகாஷ். காட்டையும் காட்டு விலங்கான யானையை காப்பாற்ற வேண்டும் என கதை வேறு பாதையில் பயணிக்கிறது. இறுதியாக இப்படத்தின் கருத்தாக முதியவர்களை நாம் எக்காரணம் கொண்டும் தவிக்க விடக்கூடாது என்று முடித்துள்ளனர். ஒரு சமூக கருத்தை மக்களுக்கு தெரிவிக்கும் படமாக இந்த படம் அமைந்துள்ளது. பெரும்பாலன மக்களுக்கு பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
[rank_math_rich_snippet id=”s-4bb7fb81-c87f-4d31-9e4c-9f41023ee030″]