Homeசினிமாமணிரத்னம் இயக்கத்தில் Thug Life செய்யும் உலகநாயகன்..!

மணிரத்னம் இயக்கத்தில் Thug Life செய்யும் உலகநாயகன்..!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரிக்கின்றன மற்றும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

கமல் – மணிரத்னம் கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம் நாயகன் ஆகும். இந்த படம் மக்கள் மத்தியில் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது அந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நாயகன் படம் வெளியாகி சுமார் 36 வருடங்கள் ஆகிறது, அதன் பிறகு தற்போது தான் இவர்கள் இணைய உள்ளனர். இப்படத்திற்கு Thug Life என டைட்டடில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் கமல்ஹாசனின் 234 படம் என்பதால் KH 234 எனவும் கூறப்படுகிறது.

Thug Life

இப்படத்தில் Kamal Haasan உடன் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். த்ரிஷா கமலுடன் இணைந்து நடிப்பது இது மூன்றாவது படம் ஆகும். மன்மதன் அம்பு, தூங்காவனம் என்ற படங்களில் ஏற்கனவே இணைந்து நடித்திருந்தார் த்ரிஷா. ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் இப்படத்தில் தான் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஆனால் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் Mani Ratnam இயக்கத்தில் முன்பே நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் போன்ற திரைநட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்தின் Title Announcement video வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular