Homeசினிமாஒரே மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் இரண்டு படம்... மகிழ்ச்சியில் கமல் ரசிகர்கள்..!

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் இரண்டு படம்… மகிழ்ச்சியில் கமல் ரசிகர்கள்..!

உலக நாகயகன் என தமிழ் திரைத்துறையினராலும் ரசிகர்களாலும் அன்புடன் அழைக்கப்படுபவர் தான் நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இவரின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதன் காரணமாக கமல் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான் விக்ரம். இந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்த விக்ரம் படம் திரையரங்குகளில் வெளிக்கி மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து. இந்த விக்ரம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கமல் நடித்த படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் வரும் ஜூன் மாதம் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் (Kamal Haasan Indian 2 Movie) வெளிகா உள்ளது என்ற அறிவிப்பு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த இந்தியன் 2 படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார்.

இந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்தது விட்டது. தற்போது படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் அதே ஜூன் மாதத்தில் இந்தியன் 2 படத்துடன் கல்கி 2898 ஏடி என்ற படமும் வெளியாக (Kalki 2898 AD Movie Release Date) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரே மாத்தில் (Kamal Haasan Movie Release Date) அடுத்தடுத்து வெளியாக உள்ள கமல் படத்தில் அவரின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Kamal Haasan Indian 2 Movie

கல்கி 2898 ஏடி (Kalki 2898 AD) என்ற படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாசுடன் இணைந்து கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வரும் ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடித்த படங்கள் வெளியாவதால் (Kamal Haasan Movie Release) அதுவும் இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க: Thalaivar 171 Title Reveal: இன்று மாலை வெளியாகிறது தலைவர் பட தலைப்பு..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular