நாம் அனைவராலும் கர்மவீரர் என அழைக்கப்படுபவர் தான் காமராஜர். இவர் 1903-ஆம் ஆண்டு ஜீலை மாதம் 15-ம் தேதி விருதுநகரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவருடைய குலத் தெய்வத்தின் பெயரான காமாட்சியின் பெயர் தான் இவருக்கு முதலில் வைக்கப்பட்டது. இவருடைய தாயார் இவரை ராசா என்றே அழைப்பார். இது தான் நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி காமராசு என்று ஆனது. மேலும் இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா என்னும் பள்ளியில் தொடங்கினார்.
இவர் தமிழகத்தின் முதல்வராகப் 9- ஆண்டுகள் பதவி வகித்தார். இவருடைய ஆட்சி காலத்தில் பல நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். இவர் அறிமுகப்படுத்திய திட்டங்களில் முக்கியமான ஒன்று தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டம் தான்.
காமராசர் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என இவருக்கு பல பெயர்கள் உண்டு. மேலும் இவர் மக்களால் “கருப்பு காந்தி” என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. இவர் நினைவாக மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்போது இப்பதிவில் நாம் காமராசரின் கவிதைகளை பார்க்கலாம்.
Table of Contents
கர்மவீரர் காமராஜர் கவிதை (Karmaveerar Kamarajar Kavithai in Tamil)
காமராசர்
பல கல்விச்சாலைகளைத் திறந்தார்
மூடிக்கொண்டன என்னவோ
பல சிறைச்சாலைகள்.
சிறந்த காமராஜர் கவிதை (Kamarajar Best Kavithai in Tamil)
அழகு தமிழிலே இவரது பேச்சு… சமத்துவம் என்பதே இவரது மூச்சு…
காமராஜர் கவிதை (Kamarajar Kavithai in Tamil)
காமராசர் பிறக்கும் முன்பு
விருதுநகர்
வெறும் நகர்.
காமராசர் பிறந்த பின்பு
விருதுநகர்
விருதுபெறும் நகர்.
காமராஜர் கல்வி பணி கவிதை (Kamarajar Kalvi Pani Kavithai in Tamil)
தன்னை மறந்து பிறரை நினைத்து தன் வீட்டையும் மறந்து நாட்டுக்காக வாழ்ந்தவர்!
எளிய காமராஜர் கவிதை (Kamarajar Kavithai in Tamil Easy)
எளிமைக்கு நீ ஒரு எடுத்துக்காட்டு! நம் தமிழ்நாட்டு மக்கள் தான் உன் உயிர் காற்று!
தமிழ் எழுத்தில் காமராஜர் கவிதை (Kamarajar Kavithai in Tamil Writing)
பகட்டான வாழ்க்கையை மறக்க வைத்தவர் இவரே! பண்பாக வாழ்ந்து காட்டி பல இதயங்களை தொட்ட வரும் இவரே!
பெருந்தலைவர் காமராஜர் கவிதை (Perunthalaivar Kamarajar Kavithai in Tamil)
தர்ம வீரரும் இவரே! கர்ம வீரரும் இவரே! தமிழகத்தில் சுதந்திர தியாகிகளில் இவரும் ஒருவரே!
குழந்தைகளுக்கான காமராஜர் கவிதை (Kamarajar Good Kavithai in Tamil for Kids)
காமராசர்
ஆட்சிக்கு வந்தார்
ஏழைகளின்
பிச்சைப்பாத்திரங்கள்
அட்சயப்பாத்திரங்கள் ஆயின.
சிலர் ஆட்சிக்கு வந்தார்கள்
ஏழைகளின்
அட்சயப்பாத்திரங்கள்
பிச்சைப்பாத்திரங்கள் ஆயின
கடைசியில் அதுவும் களவாடப்பட்டன.
Kamarajar Images With Kavithai in Tamil
காமராசர் நாடார்
காமராசர் நாடார்.
இது இனத்தின் பெயர் அல்ல
தன்மானத்தின் பெயர்.
காமராசர் காசு பணத்தை நாடார்
காமராசர் பெரும்பதவியை நாடார்
காமராசர் குறுக்குவழியை நாடார்
இப்படிப் பலவற்றை நாடார்.
Kamarajar Kavithai in Tamil For Kids
காமராசரைப் படிக்காதவர்
என்று சொல்லாதீர்கள்
மனிதவாழ்வியலை நன்கு கற்றதால் தான்
கல்விப்புரட்சிக்கு வித்திட்டார்.
காமராஜர் பெண்கல்வி கவிதைகள் (Kamarajar Pen Kalvi Kavithai in Tamil)
காமராசர் நவீனத் திருவள்ளுவர்
பழையத் திருவள்ளுவர்
முதலில் செவிக்குஉணவும்
பிறகு சிறிது வயிற்றுக்கு உணவும் என்றார்.
காமராசர்
செவிக்குஉணவும் வயிற்றுக்கு உணவும்
சேர்த்தே தரச்சொன்னார்.
Nallatchi Nayagar Kamarajar Kavithai in Tamil
நீங்கள் பதவிக்கு வந்தீர்கள்
உங்கள் காட்சியோ எளிமை
உங்கள் பேச்சோ எளிமை
உங்கள் ஆட்சியோ வளமை.
வேறு சிலர் பதவிக்கு வந்தார்கள்
அவர்கள் காட்சியோ வளமை
அவர்கள் பேச்சோ இனிமை
அவர்கள் ஆட்சியோ மிகவும் கொடுமை.
காமராஜர் பிறந்தநாள் கவிதை (Kamarajar Birthday Kavithai in Tamil)
நான் ஆத்திகவாதி
கடவுள் சாட்சியாகச் சொல்லுகிறேன்
புலவர்களே திருத்தி எழுதுங்கள்.
தமிழ்நாட்டில் எழுத்தறிவித்தவன் இறைவன் என்று எழுதாதீர்கள்
தமிழ்நாட்டில் எழுத்தறிவித்தவர் காமராசர் என்று எழுதுங்கள்.
காமராஜர் பற்றிய கவிதைகள் (Kamarajar Patriya Kavithai in Tamil)
காமராசரை ஊரே சொல்லும்
துறவி துறவி என்று
நான் சொல்லமாட்டேன் துறவி என்று
மக்கள் நலனை ஒருபோதும் துறக்காதவர்
தமிழகம் இந்தியா முன்னேற்ற எண்ணத்தை
ஒருபோதும் துறக்காதவர்.
காமராஜர் அரசியல் கவிதைகள் (Kamarajar Kavithai for Political in Tamil)
அரசியல்வாதிகள் பலர்
மண்ணில் உயிரோடு இருந்தாலும்
மக்கள் மனதில் இறந்துபோனவர்கள்.
காமராசர்
மண்ணில் இறந்துபோயிருந்தாலும்
மக்கள் மனதில் உயிரோடு வாழ்பவர்.
அவர்கள் அரசியல் வாதிகள்
காமராசர் அரசியல்தலைவர்.
பேச்சுப் போட்டிக்கான காமராஜர் கவிதை (Kamarajar Kavithai in Tamil Speech)
லால்பகதுர் சாஸ்திரியை
பிரதமராக்கி
மேக்கர் ஆனார்.
இந்திரா காந்தியை
பிரதமராக்கி
கிங்மேக்கர் ஆனார்.
புதிய காமராஜர் கவிதைகள் (Kamarajar Patriya New Kavithai in Tamil)
- உழைப்பால் உயர்ந்த வல்லர் இவரே! ஊருக்கு உழைத்த உத்தமர் இவரே! நாட்டிற்காக வாழ்ந்த நல்லவர் இவரே!
- பல அணைகள் கட்டி நீரைத் தேக்கியவர்! அந்நீரைக் கொண்டு விவசாயம் காத்தவர்! விவசாயம் செழிக்க மின்சாரமும் கொடுத்தவர்!
- தனிப்பட்ட தன் வெற்றி தோல்விகளை நினையாமல் நாட்டின் வெற்றியை மட்டும் நினைத்த ஒரே தலைவர் இவரே.
- நேர்மையே இவரது அடையாளம் எளிமையே இவரது அவதாரம்.
- தன்னாட்டு சிங்கத்தமிழன் இவர்! நேசம் போற்றும் வரலாற்று தலைவர் இவர்!
- காமராஜரின் தாரக மந்திரமாய் தாயகம் இருந்ததனால், தாயகத்தில் தாரக மந்திரமாய் இன்று காமராஜர் இருக்கின்றார்.
- மனிதாபிமானம் கொண்ட தென்னாட்டு காந்தி இவர்… கதராடை அணிந்த கல்வியின் தந்தை இவர்…
- ஏழை எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் காண சேவை செய்த பெருந் தலைவர் இவரே! கல்வி சிறந்தால் நாடு செழிக்கும் என்பதால் கல்லாமை என்பதை இல்லாமல் செய்தவர் இவரே!
- இவர் வாழ்ந்த காலமே காவியமாய்! இவர் வாழ்ந்த வருடங்கள் பொற்காலமாய்!
- பிறர் நலம் வாழ தன் நலம் துறந்தவர்.
இப்பதிவில் நாம் கர்மவீரர் காமராஜர் பற்றிய கவிதைகளை பார்த்துள்ளோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
காமராஜர் கவிதை – FAQ
1. காமராஜர் பிறந்த வருடம் என்ன?
காமராஜர் பிறந்த வருடம் 1903 ஆகும்.
2. காமராஜரின் பெற்றோர் பெயர் என்ன?
காமராஜரின் பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர்.
3. காமராஜர் தமிழகத்தின் முதல்வராக எத்தனை ஆண்டுகள் பதவி வகித்தார்?
காமராஜர் தமிழகத்தின் முதல்வராக 9 ஆண்டுகள் பதவி வகித்தார்