Homeசமையல் குறிப்புகள்உடலுக்கு வலுவான கம்பு லட்டு குழந்தைகளுக்கு பிடித்தது போல் செய்வது எப்படி..!

உடலுக்கு வலுவான கம்பு லட்டு குழந்தைகளுக்கு பிடித்தது போல் செய்வது எப்படி..!

நம் உடலை வலுவாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பவை தானியங்கள் தான். இது நாம் அனைவருக்கும் தெரியும் எனினும் அவற்றை நாம் உணவில் சேர்த்துக்கொள்வது இல்லை. ஆனால் அவற்றை நாம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எடுத்துக் கொள்ள தான் வேண்டும். இதற்கு ஒரு மாற்று வழி தான் அவற்றை சுவையான முறையில் சமைத்து உண்பது. இவ்வாறு சுவையாக செய்து தருவதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி உண்பர். எனவே நாம் இப்பதிவில் கம்பு லட்டு (Rye Laddu) குழந்தைகளுக்கு பிடித்தார்போல் செய்வது எப்படி (Kambu Laddu Recipe in Tamil) என்பது பற்றி பார்க்கலாம்.

கம்பு லட்டு செய்வது எப்படி (Kambu Laddu Recipe)

தேவையான பொருட்கள்

  • கம்பு மாவு – 1 கப்
  • வெல்லம் – 1 கப்
  • பாதாம் – 10
  • ஏலக்காய் – 5
  • பிஸ்தா – 10
  • முந்திரி – 10
  • திராட்சை – 10
  • நெய்- தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு கப் கம்பு மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
  • இப்போது அவற்றை சிறிய உருண்டைகளாக செய்து சிறிய தீயில் வைத்து நன்கு பொரித்து எடுக்க வேண்டும்.
  • அவை முழுவதும் சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்து கொள்ள வேண்டும்.
  • மற்றொரு கடாயில் நெய் ஊற்றி பாதாம், முந்திரி, திராட்சை, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது மிக்ஸியில் வறுத்த பாதாம் பிஸ்தா முந்திரி மற்றும் அதனுடன் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • மீண்டும் அதே கடாயில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி எடுக்க வேண்டும். இந்த வெல்லப்பாகு தயாரானதும் மிக்சியில் அரைத்து வைத்த கம்பு மாவு மற்றும் பொடித்த பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சை ஏலக்காய் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அடுப்பின் தீ சிறியதாக இருக்க வேண்டும்.
  • கடாயில் இந்த கலவை அடி பிடிக்காத வரை நன்று கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • இப்போது இந்த மாவு கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கையில் சூடு பொறுக்கும் வரை சிறு லட்டுகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு சூடு ஆறியதும் பரிமாறினால் ஆரோக்கியமான சுவையான கம்பு லட்டு தயார். இதனை பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை சாப்பிட்டு வரலாம்.
Kambu Laddu Seivathu Eppadi

நாம் இப்பதிவில் உடலுக்கு ஆரோக்கியமான கம்பு லட்டு செய்வது எப்படி (Kambu Laddu Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விதத்தில் இருக்கும்.

உடலுக்கு வலுவான கம்பு லட்டு குழந்தைகளுக்கு பிடித்தது போல் செய்வது எப்படி..!

உடலுக்கு வலுவான கம்பு லட்டு குழந்தைகளுக்கு பிடித்தது போல் செய்வது எப்படி என்று இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Type: Dessert

Cuisine: Tamil Nadu

Keywords: Kambu Laduu, Kambu Laddu Recipe

Recipe Yield: 5

Preparation Time: PT10M

Cooking Time: PT30M

Total Time: PT40M

Recipe Ingredients:

  • Rye flour – 1 cup
  • Jaggery – 1 cup
  • Almonds – 10
  • Cardamom – 5
  • Pistachios – 10
  • Cashew – 10
  • Ghee- As Required
  • Water – Required Quantity

Editor's Rating:
4.49
இதையும் படியுங்கள்: வெயிலுக்கு ஏற்ற குளு குளு கம்பங்கூழ்..! ஈஸியா செய்வது எப்படி?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular