kan thudikkum palangal in Tamil என்ன என்பதை இந்த பதிவில் காண்போம். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்விற்கு பல முன்னெச்சரிக்கை நிகழ்வுகளை கூறியிருக்கிறார்கள். பல்லி ஒருவருடைய உடம்பில் விழுந்தால் என்ன பலன், காக்கை வீட்டிற்கு முன் கரைந்தால் என்ன பலன், கனவு பலன் என அனைத்தும் ஜோதிட சாஸ்திரத்தின் படி கணித்துள்ளனர்.
நமது முன்னோர்களின் ஜோதிட கணிப்பு என்பது வெறும் ஆன்மீகத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. நமது ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவியலின் அடிப்படையில் உருவானது ஆகும். இந்த அடிப்படையில் தற்போது ஒருவருக்கு கண்கள் துடித்தால் என்ன பலன்கள் (kan thudikkum palangal) என்பதை பார்ப்போம்.
ஆண் மற்றும் பெண்களுக்கு வேறுபட்ட பலன்கள் – kan thudikkum palangal in Tamil
பொதுவாக கண்கள் துடித்தால் (kangal thudikkum palangal) அது நமக்கு மிகவும் அசெளகரிகத்தை கொடுக்கும். கண்கள் துடிக்கும் போது நம்மால் வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. கண்கள் துடிப்பது என்பது ஒரு தன்னிச்சையான செயலாகும். அது ஏன் ஏற்படுகிறது என யாருக்கும் அவ்வளவாக தெரியாது. இதனால் நமக்கு ஏதாவது நடக்குமா என ஒரு சிலர் குழப்பத்திலேயே இருப்பார்கள்.
கண்கள் துடிப்பது என்பது பொதுவான ஒன்றாக இருந்தாலும் அதனால் ஏற்படும் பலன்கள் ஆண் மற்றும் பெண்களுக்கு வேறுபட்ட பலன்களை கொடுக்கிறது. சீன ஜோதிட சாஸ்திரத்தின் படி ஆண்களுக்கு இடது கண் துடித்தால் அதிர்ஷ்டத்தை தரும் என்றும், வலது கண் துடிப்பதால் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அதுவே பெண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது எனவும், வலது கண் துடித்தால் நன்மை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
Table of Contents
ஆண்களுக்கு வலது கண் துடித்தால் என்ன பலன் – Right eye twitching for male in tamil
ஆண்களுக்கு பொதுவாக வலது கண்கள் துடித்தால் (Aanalukku valathu kangal thudithal enna palan) நல்ல செய்தி வந்து சேரும். அதாவது அவர்கள் பார்க்கும் வர்த்தகம், தொழில், வேலைகளில் நன்மை உண்டாகும். இதுவே வலது பக்கம் புருவம் துடித்தால் அவர்களுக்கு புகழ், பெருமை உண்டாகும். வலது கண் கீழ் தசை துடித்தால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க கூடிய பிரச்சனைகள் விரைவில் தீர்ந்துவிடும்.
ஆண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன பலன் – Left eye twitching for male in tamil
ஆண்களுக்கு இடது கண்கள் துடித்தால் (Aankalukku idathu kangal thudithal enna palan) அது கெட்டதாக பார்க்கப்படுகிறது. இது அவர்களுக்கு சற்று கடினமான நேரத்தை குறிக்கிறது. செய்யும் செயல்களில் அவர்களுக்கு கவனம் தேவை. இடது கண்கள் துடித்தால் அவர்கள் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும்.
பெண்களுக்கு வலது கண்கள் துடித்தால் என்ன பலன் – Right eye twitching for female in tamil
பெண்களுக்கு வலது கண்கள் (Penkalukku valathu kangal thudithal enna palan) துடிப்பது கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக பெண்கள் கண்களை மை வைத்து அழகுப்படுத்துவார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு கண்கள் துடிக்கும் போது சற்று மன குழப்பத்தில் சென்றுவிடுவார்கள். காரணம் ஆண்களை விட பெண்கள் தான் கண்கள் துடித்தால் என்ன நடக்குமோ என்ற பயம் கொள்வார்கள். இந்நிலையில் அவர்களுக்கு வலது கண் துடித்தால் அவர்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். வலது கண்ணின் கீழ் இமை துடித்தால் கணவரின் உடல்நிலையில் பிரச்சனை ஏற்படும்.
பெண்களுக்கு இடது கண்கள் துடித்தால் என்ன பலன் – left eye twitching for female in tamil
பெண்களுக்கு இடது கண்கள் துடித்தால் (Penkalukku valathu kangal thudithal enna palan) நல்ல சகுனமாகும். வலது கண்கள் துடித்தால் தான் கெட்டதே தவிர இடது கண்கள் துடித்தால் வீட்டில் மகிழ்ச்சி, செல்வம் பெரும். பெண்களுக்கு சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இடது கண்கள் துடித்தால் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
அறிவியல் காரணம்
கண்கள் துடிப்பதற்கு (eye throbbing in Tamil) மற்றுமொரு காரணம் என்னவென்றால் மன உலைச்சல், மனசோர்வு, தூக்கமின்மை, நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்துவது, நீண்ட நேரம் கம்பியூட்டரில் வேலை பார்ப்பது ஆகிய காரணங்களாலும் கண்களில் துடிப்பு ஏற்படும். நல்ல சத்தான உணவுகளை உண்பதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். அல்லது மருத்துவரின் ஆலோசனையை பெறலாம்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு காரணமாக இந்த கண் துடிப்பு ஏற்படும். இதனை தவிர்க்க பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பது நல்லது.
1. கண்கள் துடிப்பதற்கு பொதுவான காரணங்கள் என்ன?
மன உலைச்சல், மனசோர்வு, தூக்கமின்மை, நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்துவது, அதிகப்படியான மது அருந்துதல் போன்ற காரணங்களால் கண்கள் துடிக்கின்றன.
2. கண்கள் துடிப்பு எத்தனை நாட்களுக்கு இருக்கும்?
கண்கள் துடிப்பு சில நாட்களுக்கு மட்டும் தான் இருக்கும். ஆனால் தொடர்ந்து நீங்கள் அசெளகரியமாக உணர்ந்தால் மருத்துவரை அணுகலாம்.
3. என்ன குறைபாட்டினால் கண்கள் துடிப்பு ஏற்படுகிறது?
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாட்டினால் கண்கள் துடிப்பு ஏற்படுகிறது. முக்கியமாக வைட்டமின் பி 12, வைட்டமின் டி அல்லது மெக்னீசியம்.