Homeசினிமா13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை..! யார் அவர்?

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை..! யார் அவர்?

2000 காலகட்டங்களில் எல்லாம் பல பெண்களுக்கு பிடித்த நடிகர் என்றால் அது நிச்சயம் மாதவன் தான். ஏன் இன்றுவரை கூட அப்படி தான். பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்களை தன்வசம் வைத்திருந்த நடிகர் தான் மாதவன். இதற்கு ஏற்றாற் போல் இவரது படங்களும் அனைவருக்கும் பிடித்த விதத்திலும் இருக்கும். இதனால் பல வருடங்களாக தமிழ் திரையுலகில் முக்கிய முன்னணி நடிகராக இருந்தார் மாதவன்.

இவ்வாறு முன்னணி நடிகராக இருந்த மாதவன் சில வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். சில வருடங்களுக்கு பிறகு கடந்த 2015-ம் ஆண்டு இறுதிசுற்று என்னும் படத்தின் மூலம் ரீஎன்டிரி கொடுத்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் வேதா என்னும் படத்தில் நடித்தார் இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.

இதை தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கூட இவரது நடிப்பில் ஷைத்தான் என்னும் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்தப் படம் ஒரு திரில்லர் படம் ஆகும். இந்த படத்தில் மாதவனின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மாதவன் தனது அடுத்த படத்தில் கமிட் ஆகவுள்ளார் என்று தகவல் (Actor Madhavan Next Movie Update) வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக (Actor Madhavan Next Movie Heroine) சமீபத்தில் சந்திரமுகி படத்தில் நடித்த கங்கனா (Kangana Ranaut) தான் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் படத்தின் இயக்குனர் ஏ. எல். விஜய் தான் இயக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாம். சி.எல் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Actor Madhavan Next Movie Heroine

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாதவன் மற்றும் கங்கனா இருவரும் இதற்கு முன்னர் இந்தியில் 2011-ம் ஆண்டு வெளியான தனு வெட்ஸ் மனு என்னும் படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 13 வருடங்களுக்கு பிறகு மாதவன் மற்றும் கங்கனா ஜோடி மீண்டும் இப்படத்தில் இணையவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: Atlee Next Movie Update: இந்த காம்போவ யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular