தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா தற்போது கங்குவா என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு வராலாற்று படம் போல இருப்பதால் இந்த படத்தில் மீதான எதிர்ப்பார்ப்பு மக்களுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இந்த படத்தின் புதிய போஸ்டரை (Kanguva Movie New Poster) நடிகர் சூரியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக திஷா பதானி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
மேலும் இந்தப் படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் 3டி எபெர்ட்டில் உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த கங்குவா படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தான் தற்போது படத்தின் புதிய போஸ்டரை (Kanguva New Poster) நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கதில் வெளியிட்டுள்ளார். இந்த புதிய போஸ்டர் ரசிகர்களின் அதிகமாக கவர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்: அம்பானி வீட்டு திருமணத்தில் சமையலில் கலக்கும் தமிழர்..! யார் இவர்..! |