கன்னட திரையுலகில் முக்கிய முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் யாஷ். இவர் கன்னடத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்த திரைப்படம் என்றால் அது கேஜிஎஃப் தான். இந்த படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களின் மூலம் இவர் இந்திய அளவில் பிரபலமானார்.
இந்த கேஜிஎஃப் படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு பிரபல நடிகராக மாறிய அவர் தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது நடிகர் யாஷ் தனது அடுத்த படத்தில் நடித்து (Yash Next Film) வருகிறார். இப்படம் இவருக்கு 19-வது படம் ஆகும்.
இந்த படத்திற்கு டாக்ஸிக் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படமானது அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி (10.04.2025) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை முன்னாள் நடிகை மற்றும் இயக்குனரான கீது மோகன்தாஸ் இயக்குகிறார்.
மேலும் இந்த படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மாஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்நிலையில் தான் தற்போது இப்படத்தில் ஒரு முக்கிய பாலிவுட் கதாநாயகி இணையவுள்ளதாக (Yash Next Movie Heroine) தகவல் வெளியாகியுள்ளது. இது யாஷ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்ஸிக் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் இந்தி நடிகையான கரீனா கபூர் (Kareena Kapoor) நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர்களுடன் உரையாடிய கரீனா கபூர் படத்தின் பெயரைச் சொல்லாமல் தற்போது இந்த தகவலை அவரே உறுதி செய்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் நான் முதன்முறையாக ஒரு மிகப்பெரிய தென்னிந்திய படத்தில் நடிக்கிறேன் என்றும் இந்த படமானது ஒரு பான் இந்தியா படமான உருவாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்த படத்தின் படப்பிடிப்பு எங்கு நடக்க இருக்கிறது என்பது தெரிய வில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் இந்த தகவலை என் ரசிகர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தில் இவர்களில் காம்போ நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: இளையராஜா பயோபிக்: கதையின் தொடக்கத்தை கூறும் போஸ்டரை வெளியிட்டார் தனுஷ்..! |