பிரபல தனியார் தாெலைக்காட்சியான விஜய் டிவில் ஒளிபரப்பாகும் சீரயலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளங்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் சன் டிவில் சீரியல்களை தனது ராடன் மீடியா ஒர்க்ஸ் மூலம் தயாரித்து வந்த ராதிகா சரத்குமார், விஜய் டிவில் கிழக்கு வாசல் என்ற (kizhakku vaasal serial) சீரியலை தயாரித்து வந்தார்.
முதலில் கண்ணமா சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருந்த அந்த நேரத்தில் தான் இந்த சீரியலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சீரியலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் தந்தை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரியவந்ததும், இந்த சீரியலுக்கான எதிர்ப்பார்ப்பு அனைவரிடம் இருந்தது.
இந்த சீரியலில் ரேஷ்மா முரளிதரன், ரோஜா ஸ்ரீ, வெங்கட் ரங்கநாதன், அஸ்வினி ராதாகிருஷ்ணா, ஆனந்த பாபு, ஷியாம், பிரவீன் என நிறைய பேர் நடித்தனர். முதலில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு, அடுத்து மாலை நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு மதிய நேரத்திற்கு மாற்றப்பட்டது.
மிகவும் விறுவிறுப்பாகவும், எதிர்பாராத திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த கிழக்கு வாசல் சீரியல் கடந்த சில நாட்களாகவே சீரியலின் கதாநாயகி இல்லாமல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. சீரியலில் பல புதிய கேரட்டர்களும் அறிமுகம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கடந்த சில வாரங்களாகவே இந்த சீரியலுக்கான டிஆர்பி-யும் சரிய தொடங்கியது. இதனால் ஒவ்வொரு வார டிஆர்பி ரேட்டிங்கிலும் கிழக்கு வாசல் பெரிய அளவில் இடம்பெறாததால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர ராடன் மீடியா ஒர்க்ஸ் முடிசெய்தது. இதனால் இந்த சீரியல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என்று தவல் வெளிவந்துள்ளது.
இன்னும் சில தினங்களில் இந்த சீரியல் முடிவுக்கு (kizhakku vaasal serial going to end) வரும் என்பதால் இந்த சீரியலின் கிளைமேக்ஸ் பாசிடிவாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Kalvan Movie review: உணர்வுபூர்வமான கதைக்களத்துடன் வெளியான கள்வன்..! மக்கள் மனதை கொள்ளை கொண்டதா? |