Ayan movie: நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அயன். இந்த படத்தை எம். சரவணன் மற்றும் எம்.எஸ்.குகன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. அதிரடி திரைப்படமாக வெளிவந்த அயன் படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது.
இந்த படத்தில் நடிகர் சூர்யா-விற்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிகர் பிரபு, ஜெகன், கருணாஸ் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். போதைப்பொருளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ப்ளாக்பாஸ்டர் திரைப்படமாக சூர்யாவிற்கு அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களுமே ரசிகர்களின் பிளே லிஸ்டில் இன்றும் தனி இடத்தை பிடித்துள்ளது.
பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தாலும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் தான் இந்த படத்தில் வில்லன் (Ayan movie villain) கதாபாத்திரத்தில் நடித்த கமலேஷ். இவரின் உண்மையான பெயர் ஆகாஷ்தீப் சைகல். இந்த படத்தில் மாஸ் காட்டியது இவர் என்றே கூறலாம். காரணம் இந்த படத்தில் இவர் சென்னையில் வாழும் ராஜஸ்தான் வில்லனாக நடித்திருப்பார். முக்கியமாக போததைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகவும் (Ayan movie villain kamalesh) நடித்திருப்பார்.
இந்த படத்தில் இவர் நடிப்பு மட்டுமல்லாமல் இவரின் குரல் அனைவருக்கும் பிடித்து போயிருக்கும். இந்த படத்தில் இவருக்கு டப்பிங் பேசியவர் கோலங்கள் நாடகத்தில் நடித்த சீரியல் நாயகன் அஜய். இவர் ஸ்டைலாக ஆங்கிலம் பேசுவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவரின் இந்த டப்பிங் கமலேஷ் கதாபாத்திரத்திற்கு தனி சிறப்பை ஏற்படுத்தி கொடுத்தது என்றே கூறலாம்.
ஆனால் இந்த கமலேஷ் கதாபத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகரே அஜய் (kolangal Actor Ajay Kapoor) தானாம். ஆனால் அந்த சமயம் அஜய் கோலங்கள் மற்றும் பிற சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் இவரால் நடிக்காமல் போய்விட்டது. இருந்த போதிலும் இந்த கமலேஷ் கதாபாத்திரத்திற்கு இவர் பேசிய டப்பிங் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது.
டப்பிங் முடிந்த உடனே கே.வி.ஆனந்த் இவரை கட்டியணைத்து இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துவிட்டாய் என்று பாராட்டினாராம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ரூ.80 கோடி வசூல் செய்தது. கேரளாவிலும் இந்த படம் வெளியாகி வெற்றி பெற்றது.
மேலும் படிக்க பையா 2: இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட பையா படத்தின் இரண்டாம் பாகம்..! சூப்பர் அப்டேட்..! |