Homeசினிமாஅரசு பள்ளிகளுக்கு 15 லட்சம் நிதியுதவி அளித்த பாலா..!

அரசு பள்ளிகளுக்கு 15 லட்சம் நிதியுதவி அளித்த பாலா..!

சின்னத்திரையில் பிரபலமான உள்ளவர்களில் ஒருவர் தான் பாலா. இவர் பல வருடங்களாக பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் சில படங்களிலும் நடித்து வருகிறார். பல திரைப்பிரபலங்கள் மக்களுக்கு பல வகைகளில் நிதியுதவிகளை செய்து வருகின்றனர். இந்த வரிசையில் பாலாவும் மக்களுக்காக தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் தான் சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் உணவு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு கூட சிரம பட்டனர். அப்போது நடிகர் பாலா சென்னையில் சில பகுதியில் உள்ள மக்களுக்கு நிதியுதவி செய்தார்.

மேலும் மருத்துவ வசதி இல்லாத ஒரு கிராமத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார். இதுபோன்ற பல வகையான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து பாலா செய்துக்கொண்டுதான் உள்ளார். இந்நிலையில் தான் தற்போது அரசு பள்ளி ஒன்றுக்கு கழிப்பறை கட்ட நிதியுதவி வழங்கியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியை அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டுவதற்கு 15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் நடிகர் பாலா. இந்த பள்ளியில் கழிப்பறை வசதி இன்றி மாணவர்கள் கஷ்டப்படுவதாக இப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பாலாவுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து பாலா நடிகர் ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்டுள்ளார் அவர் உதவவே இருவரும் இணைந்து பள்ளிக்கு சென்று இன்று காசோலையை வழங்கியுள்ளனர்.

KPY Bala
இதையும் படியுங்கள்: அரசியலுக்கு வருவது குறித்து பேசிய KPY Bala..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular